ஹெர்போ கேரின் உடல் எடை குறைப்பு சிகிச்சையில் மாணவி பலி!! போலீசார் விசாரணை

சேலம்:

சேலம் மாவட்டத்தில் உள்ள ஹெர்போ கேர் ஆயுர்வேதிக் மருத்துவமனையில் பாக்யஸ்ரீ என்ற 17 வயது மாணவி உடல் எடை குறைப்பு சிகிச்சைக்காக சேர்ந்தார். இவர் ஸ்ரீ பாலகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவி. மருத்துவமனையில் அளிக்கப்பட் தவறான சிகிச்சை காரணமாக பாக்யஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து பாக்யஸ்ரீ தந்தை சக்தி கூறுகையில், ‘‘மருத்துவமனையின் உரிமையாளரான நவீன் பாலாஜி என்பவர் எனது மகளின் உடல் எடையை கண்டிப்பாக குறைப்பதாக உறுதியளித்தார். கடந்த மாதம் எனது மகளை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றேன். 9 நாட்கள் அவர் சிகிச்சை அளித்தார். அடுத்தகட்டமாக கட ந்த 2ம் தேதி மருத்துவமனை சென்றோம். அப்போது சில மருந்துகளை கொடுத்து எனது மகளை தொடர் ந்து சாப்பிடுமாறு தெரிவித்தார்’’ என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ‘‘ பாக்யஸ்ரீ உடல் பருமனாக இருந்தார். இதனால் அவருக்கு மூச்சு திணறல் இருந்து வந்தது. மற்றபடி அவருக்கு எந்த விதமான உடல் நலக் குறைவும் கிடையாது. தொடர்ந்து கல்லூரி க்கு சென்று வந்தார். ஆனால், இந்த மருந்துகளை 2 நாட்கள் சாப்பிட்ட பிறகு அவர் மயக்கம் அடைந்தார்.

அதோடு 3 வயது குழந்தையை போல் அவர் செயல்பட தொடங்கினார். அதன் பிறகு ஒரு தனியார் மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றோம். இந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்ற தகவலை ஹெர்போ கேர் மருத்துவமனை டாக்டருக்கு தெரிவித்தோம். இதையடுத்து உடனடியாக பாக்யஸ்ரீயை தனது மருத்துவமனைக்கு கொண்டு வருமாறு கூறினார். அதனால் அவரை மீண்டும் அந்த மருத்துவமனைக் கெ £ண்டு சென்றோம்’’ என்றார்.

‘‘அங்கு மேலும் சில மருந்துகளை அவர் கொடுத்தார். அதன் பிறகு எனது மகள் சுய நினைவை இழ ந்துவிட்டார். நான்கு நாட்களுக்கு இதே நிலை தான் நீடித்தது’’ என்றார் சக்தி.

இதன் பிறகு கடந்த 9ம் தேதி ஒரு திருமண நிகழ்ச்சிக்கு பாக்யஸ்ரீ பெற்றோர் செல்ல வேண்டியிருந்தது. அதனால் பாக்யஸ்ரீயை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் திருமணத்திற்கு சென்று வாருங்கள் என்று அந்த மருத்துவமனையின் டாக்டர் கல்பனா என்பவர் தெரிவித்துள்ளார். இதனால் கணவன் மனைவி இருவரும் திருமணத்திற்கு சென்றனர்.

அரை மணி நேரத்திற்கு ஒரு முறை போன் அவரது உடல் நிலை குறித்து கேட்டறிந்து கொண்டனர். 8ம் தேதி இரவு பாக்யஸ்ரீ உடல்நிலை மேலும் மோசமானது. இதனால் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவி க்காமல் ஹெர்போ கேர் மருத்துவர்கள் அவரை வேறு ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மறுநாள் காலை 9 மணிக்கு பாக்யஸ்ரீ தந்தை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார்.

அப்போது ‘‘அவர் நலமுடன் உள்ளார். சூப் குடித்தார் என்று மருத்துவர் தெரிவித்துள்ளார். இதனால் பெற்றோர் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் அடுத்த ஒரு மணி நேரத்தில் எங்களது வீட்டிற்கு ஆம்புலன்சில் பாக்யஸ்ரீயின் இறந்த உடலை கொண்டு வந்தனர்’’ என்று அவரது தந்தை தெரிவித்தார்.

இதுகுறித்து ஹெர்போ கேர் மருத்துவமனை டாக்டர் நவீன் பாலாஜி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘அந்த பெண் 8ம் தேதி இரவு 10.30 மணியளவில் இறந்தார். அவரது பெற்றோர் திருமண விழாவில் கல ந்துகொள்ள சென்றிருந்ததால் நாங்கள் தகவல் தெரிவிக்கவில்லை. அதனால் மறுநாள் காலை 6 மணிக்கு தகவல் தெரிவித்தோம்.

8ம் தேதி இரவு அவரது நிலைமை மிகவும் மோசமானது. அதனால் அவரை வேறு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். நாங்கள் உரிய சிகிச்சை அளித்தோம்’’ என்றார்.

இது குறித்து சக்தி கொடுத்த புகாரின் பேரில் கவுந்தபாடி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தவறான சிகிச்சையால் அவர் இறந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ளனர். இதன் முடிவு வந்த பிறகு தான் பாக்யஸ்ரீ மறைவுக்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.


English Summary
TN girl seeking weight loss treatment in Ayurvedic hospital dies, parents allege malpractice