சு.சுவாமி சொன்னதை இலங்கை அரசு செய்தது! தமிழக மீனவர்கள் அதிர்ச்சி!

Must read

ல்லை தாண்டி தங்கள் நாட்டு கடல் எல்லைக்குள் வந்ததாக, இலங்கை அரசு கைப்பற்றிய 122 தமிழக மீனவர்களின் படகுகள் மற்றும் உபகரணங்களை இலங்கை, அரசுடமையாக்கிவிட்டதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை  அந்நாட்டு மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த அமர வீரா அறிவிப்பை இன்று வெளியிட்டார்.

இதனால் தமிழக மீனவர்கள் கொதித்துப்போய் உள்ளனர்.
மீனவர்  சங்க தலைவர் போஸ்,  இந்த நடவடிக்கையை கடுமையக கண்டித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது:
” இலங்கை அரசின் இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது. இதனால் 122 படகுகளை நம்பி வாழ்ந்து வந்த மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இலங்கை அரசின் இந்த துணிச்சலுக்குக் காரணம், கையாலாகத மத்திய பாஜக அரசுதான்.
இலங்கை அரசின் அத்துமீறல்களை அவ்வப்போது கண்டித்து வந்திருந்தால், இப்போது இலங்கை அரசுக்கு இந்தத் துணிச்சல் வந்திருக்காது.
முந்திய மத்திய காங்கிரஸ் அரசு,  இலங்கையின் இது போன்ற நடவடிக்கைகளை அவ்வப்போது கண்டித்துவந்தது. அந்த நாட்டு அரசுடன் பேசி மீனவர்களையும், படகுகளையும் மீட்டுத்தந்தது. ஆனால் தற்போதைய பாஜக அரசு இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை.
இந்த விவகாரத்தில் (தமிழக) மாநில அரசு, மத்திய அரசுக்கு கடிதம்தான் எழுத முடியும். இது வெளிநாடு தொடர்பான விவகாரம் என்பதால் மத்திய அரசுதான் நடவடிக்கை  எடுக்க முடியும். ஆனால் மத்திய  பாஜக அரசு,  தமிழக மீனவர்களின் பிரச்சினையை பொருட்படுத்துவதே இல்லை” என்று தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.
ஏற்கெனவே பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி, “இலங்கை எல்லைக்குள் நுழையும் தமிழக மீனவர்களின் படகுகளை அரசுடமையாக்க வேண்டும்: என்று இலங்கை அரசுக்கு அறிவுரை கூறியதாக அவரே பலமுறை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மீனவர்கள் பிரச்சினை குறித்து  இந்திய இலங்கை அரசுகளிடையே நாளை பேச்சுவார்த்தை நடைபெற இருக்கும் நிலையில், இலங்கை அரசின் நடவடிக்கை அதிர்ச்சி அளித்துள்ளது.
 
Captured boats of Tamil Nadu Fishermen nationalised by the Sri Lankan Government. Fishery Minster of Sri Lanka Mahida Amaraveera  announced at colombo today . All boats and accessories captured will be nationalised. It is to be noted that BJP leader Subramanian Swamy advised Sri Lankan Government to nationalise the captured boats to teach Tamil Nadu Fishermen a lesson not to stray.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article