சென்னை

மிழக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியின் போது அமைச்சராக பணியாற்றியவர் ஆற்காடு வீராசாமி.   இவர் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஆவார்.    தனது உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதைத் தவிர்த்து வந்தார்.

நேற்று ஆற்காடு வீராசாமி அவரது இல்லத்தில் வழுக்கி விழுந்துள்ளார்.  இதனால் அவருக்குக் காலில் காயம் ஏற்பட்டுள்ளது.  அவர் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.