மேஷம்

எந்தெந்த விஷயத்தையெல்லாம் எப்படி எப்படிச் செய்து முடித்து வெற்றி பெற வேண்டும் என்று மனதுக்குள் போடும் திட்டங்களை ரகசியமாக வைத்துக் காரியத்தை சாதிப்பீங்க. இந்த வாரம் பணவரத்து அதிகமாகி பொருளாதாரம் ஓங்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். சுதந்திர எண்ணம் உண்டாகும். சின்னச் சின்ன விஷயங்களில் கூட மனநிறைவு ஏற்படும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் தங்கள் வியாபாரம் தொடர்பாக பயணம் செல்ல நேரிடலாம். போட்டிகள் விலகும். அனுபவசாலிகளின் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல் அனுசரித்துச் செல்வது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பணவரத்தும் திருப்தி தரும். மேலிடம் உங்களிடம் நல்ல அணுகுமுறையை நீட்டிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும்.

ரிஷபம்

உடல் ஆரோக்கியம் பெறும். வார்த்தைகளில் நிதானத்தை கடைபிடிப்பது மற்றவர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படாமல் காத்து வெல்வீங்க. வாழ்க்கைத் துணையின் நலனில் அக்கறை காண்பிப்பீங்க. பெண்களுக்கு பணவரத்து அதிகமாகி பொருளாதாரம் ஓங்கும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சின்ன விஷயங் களைக் கூட கவனமாக செய்வீங்க என்பதால்  வெற்றி உறுதி. மாணவர்களுக்கு சக மாணவர்களின் கருத்து களுக்கு மாற்று கருத்துகளை கூறாமல் அனுசரித்துச் செல்வது சுமுகமான சூழ்நிலையை ஏற்படுத்தும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். திறமையாக எந்த ஒரு காரியத்தையும் செய்து பாராட்டும், மதிப்பும், மரியாதையும் பெறுவீங்க. நீங்க நேரத்தின் மதிப்பை உணர்ந்து செயல்பட்டு வெற்றி பெறுவீங்க. திட்டமிட்டுச் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக எதையும் செய்வது நல்லது. எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

மிதுனம்

அதிக முயற்சி செய்ய வேண்டி இருக்கும். பயணங்கள் ஏற்படலாம். தொழில், வியாபாரம் தொடர்பாக அலைச்சல் உண்டாகலாம். பணியாளர்கள் செயல்கள் உங்களின் உற்சாகத்தைத் தூண்டும்படியாக இருக்கலாம். பண விவகாரங்களில் நன்மை உண்டு. தந்தையின் ஆரோக்யத்தில்  கவனமாக இருந்து நன்மை காண்பீங்க. லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணிச்சுமை காரணமாக அதிக நேரம் வேலை பார்க்க வேண்டி இருந்தாலும் எதிர்பாராத பாராட்டும், வருமானமும், அவார்ட் போன்றவையும் கிடைக்கும்.  நெருப்பு, ஆயுதங்களை பயன்படுத்துபவர்கள் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் மன நிறைவு ஏற்படும் வகையில் விஷயங்கள் நடக்கும். வாழ்க்கைத் துணையால் நன்மை உண்டாகும். குழந்தைகளுக்காகப் பாடுபடுவது வீண் போகாது. விருந்தினர் வருகை இருக்கும்.

கடகம்

யாரும், எந்த விஷயத்தையும் பகிரும்போது உடனடியாக ரியாக்ட் செய்யாதீர்கள். பெண்களுக்கு உணர்ச்சி வசப்படாமல் எதையும் சிந்தித்து செயல்படுவது நன்மை தரும். கடின முயற்சியின் பேரிலேயே காரியங்கள் பெற்றி பெற்றாலும் இறுதியில் வெற்றி உண்டு. மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண அதிக முயற்சி செய்து பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. விருந்தினர் வருகையால் நன்மையும் குதூகலமும் இருக்கும். உறவினர், நண்பர்களுடன் ஏற்பட்டிருந்த திடீர்க் கருத்து வேற்றுமை நீங்கும். நிதி விஷயங்களைத் தீர்மானிக்கையில் நிதானத்தைக் கடைப்பிடிப்பீங்க. குழந்தைகளை வெளிநாடு சென்று படிக்க வைக்கும் முயற்சிகள் வெற்றி தரும். பெண்களுக்கு உணர்ச்சிவசப்படாமல் எதையும் சிந்தித்து செயல்பட்டு வெற்றியடைவீங்க. முயற்சிகள் நன்மை தரும். குழந்தைகளை வெளிநாடு சென்று படிக்க வைக்கும் முயற்சிகள் வெற்றி தரும்.

சந்திராஷ்டமம் : ஜனவரி 5 முதல் ஜனவரி 8 வரை

சிம்மம்

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணுவீங்க.  அதிக முயற்சி செய்து பாடங்களை படிக்க வேண்டி யிருந்த நிலை மாறி அனைத்தும் சுலபமாகும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. முயற்சிகளால் முன்னேற்றத்தைக் காணக்கூடிய வாரம். கணவரின் / மனைவியின் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளின் கல்வி மற்றும் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தாய் தந்தையரின் ஆதரவு கிடைக்கும், அவர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சகோதரிகள் பக்கபலமாக இருப்பார்கள். சொத்து தொடர்பான பிரச்சினைகளில் சுமுகமான நிலை ஏற்படும். வீடு, நிலம் வாங்கும் யோகம் ஒரு சிலருக்கு உண்டு. அதற்கான லோன் கிடைக்கும். வாகனம் மற்றும் வாய்ப்புகளும் உண்டு. உத்தியோகத்தில் இயல்பான நிலை தோன்றும். ஒரு சிலருக்கு வேலை தொடர்பாக அழுத்தங்கள் குறைந்து ரிலாக்ஸ் ஆவீங்க.  தொழிலில் / வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும்.

சந்திராஷ்டமம் : ஜனவரி 8 முதல் ஜனவரி 10 வரை

கன்னி

தொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத வருமானம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. உறவினர்களுடன் தேவையில்லாத கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டால் சற்றுத் தணிந்து போவது நல்லது. பொறுமையாக எந்த ஒரு விஷயத்தையும் கையாண்டு வெற்றி பெறுவீங்க. கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வருமானத்திற்கு குறை இருக்காது. தொழில் தொடர்பாக எடுக்கும் முயற்சியில் முன்னேற்றம் காண்பீங்க. வியாபாரிகளுக்கு வருமானம் இருமடங்காக இருக்கும். எடுத்துக்கொண்ட முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தாமதமாகிக் கொண்டிருந்த அலுவலக வேலைகளை திடீர் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீங்க. இல்லத்திற்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்கி மன நிறைவடைவீங்க. ஆரோக்கியத்தில் முன்பு ஏற்பட்டிருந்த பாதிப்பு விலகும். சிறிய அளவிலான மருத்துவ செலவு ஏற்பட வாய்ப்பு உண்டு.

சந்திராஷ்டமம் : ஜனவரி 10 முதல் ஜனவரி 12 வரை

துலாம்

அலுவலகத்தில் மற்றவர் வேலையைப் பார்க்க வேண்டி வந்தால் பணிவாக மறுத்துவிடுங்கள். உங்க வேலையையும் யாருடைய பொறுப்பிலும் விட வேண்டாம்.  செலவுகள் மிக அதிக அளவில் ஏற்பட்டாலும் பலன் இனிக்கும். பழைய பொருட்களை மாற்றிப் புதிய பொருட்கள் வாங்குவீங்க. தொழில் தொடர்பான பயணங்கள் நற்பலன் தரும். வியாபார விஷயங்களில் அலைச்சல் அதிகமாகும். பயணங்களைத் தவிர்க்க முயன்றாலும் அது தன்னிச்சையாய் நிகழும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் போடும்போது அதிக கவனத்துடன் செயல்படுங்கள். வியாபாரத்தில் கடன் தொடர்பான வெற்றி உருவாகும். அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். எதிர்பார்த்துக் காத்திருந்த தகவல் இன்று கிடைக்கும். தொழில் தொடர்பான சந்திப்புகள் திருப்திகரமாக இருக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீங்க.

சந்திராஷ்டமம் : ஜனவரி 12 முதல் ஜனவரி 15 வரை

விருச்சிகம்

புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும். மன நிறைவு உண்டாகும் வாரம். பொருளாதாரத் தேவைகள் பூர்த்தி ஆகும். சேமிப்பு உயரும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நவீன பொருட்கள், ஆடம்பரப் பொருட்கள் வாங்கும் வாய்ப்பு உண்டு. திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். திருமண வயதில் பிள்ளைகள் இருந்தால் பிள்ளைகளுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். எந்த ஒரு புதிய முயற்சியில் ஈடுபட்டாலும் சாதகமாக இருக்கும். முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. பணவரவு மட்டுமல்லாமல் புதிய தொழில் ஒப்பந்தங்களும் கிடைக்கும்.

தனுசு

வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். சகோதர சகோதரிகளுக்குத் திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் நடக்கும் வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீங்க. மருத்துவச் செலவு வெகுவாகக் குறையும். கலைஞர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் இரு மடங்காக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கடுமையான உழைப்பு மற்றும் முயற்சிக்குப் பின் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு உள்ளிட்டவை சற்றுத் தாமதமாகக் கிடைக்கும். நீண்ட நாட்களாக வராமலிருந்த பணம் வசூலாகும். புதிதாக தொழில் தொடங்கும் முயற்சி சாதகமாக இருக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவீங்க. நண்பர்களால் செலவுகள் உண்டு. ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிப்பீங்க. வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் உண்டாகும்.

மகரம்

நீண்ட நாள் மனதை வருத்திக் கொண்டிருந்த கடன் பிரச்சினை சற்றே  முடிவுக்கு வரும். வங்கிக் கடன் தொடர்பான சிக்கல்கள் தீரும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். அரசு வழியில் இருந்த பிரச்சினை கள் விலகும். சுப காரிய பேச்சுக்கள் நல்ல முடிவுக்கு வரும். அலுவலகப் பணியில் சக ஊழியர்களுக்கு உதவி செய்து நெகிழ வைப்பீங்க. அது பிற்காலத்தில் பலனளிக்கும். தொழில் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த தகவல் கிடைக்கும். புதிய வியாபாரம் தொடங்குவது தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். சிறப்பான பலன்கள் நடைபெறும் வாரம். ஆரோக்கிய பிரச்சினைகள் தீரும். கடன் தொடர்பான முக்கியமான பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும். சொத்து சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிவடையும். தரகு மற்றும் கமிஷன் தொடர்பான தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பாராத லாபம் ஏற்படும்.

கும்பம்

தேவையற்ற பயணங்கள் ஏற்படும். அலைச்சல் அதிகமாக இருக்கும். செலவுகள் எதிர்பாராத வகையில் ஏற்படும். சிக்கனமாக இருக்க வேண்டியது அவசியம். நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் கிடைக்கும். குழந்தைகள் பெருமிதம் அளிக்கும் சாதனை ஒன்றைச் செய்து மகிழ்விப்பார்கள். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் உங்க முயற்சியால் சுமுகமாக முடிவடையும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். தொழில் தொடர்பான முக்கிய சந்திப்புகளில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீங்க. நன்மைகள் பலவாறாக நடக்கும். வருமானம் இருமடங்காக ஏற்படும். எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். கடன் தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அலுவலகத்தில் எதிர்பார்த்த ஆதரவும் ஆறுதலும் கிடைக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி முழு வெற்றியைத் தரும். இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். பணி அழுத்தம் குறைந்து ரிலாக்ஸ் ஆவீங்க.

மீனம்

வியாபாரத்தில் எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் சாதகமான வெற்றியைக் காணலாம். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். தொழில் வளர்ச்சி அமோகமாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீங்க. முதலீடுகளும் கிடைக்கும். ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். பெண்களுக்கு எடுத்துக்கொண்ட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சுயதொழில் தொடர்பான விஷயங்களில் ஆதரவு கிடைக்கும். சொத்துப் பிரச்சினை சாதகமாக இருக்கும். சகோதரர்கள் உதவுவாங்க. -குடும்பத்தில் யாரோ ஒருவருக்குத் திருமணத் தேதி குறிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. கலைஞர்களுக்கு நண்பர்களால் புதிய முன்னேற்ற வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் தொடர்பான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். முயற்சிகளின் பலன்கள் சாதகமாக இருக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். அலுவலகத்தில் வரவேண்டிய சலுகைகள் கிடைக்கும்.