சென்னை

மிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வேட்புமனு தாக்கல் நடவடிக்கைகளை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களிடம்,

“ தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கு இன்று (20ம் தேதி) வேட்பு மனு தாக்கல் காலை 11 மணிக்குத் தொடங்குகிறது. 27ம் தேதி பகல் 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படும். வேட்புமனு செய்யும்போது கண்டிப்பாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.  மனுத் தாக்கல் கடைசி நாளில் (27ம் தேதி) பகல் 3 மணிக்குள் வருபவர்களுக்கு வரிசைப்படி டோக்கன் வழங்கி, அவர்களின் வேட்பு மனுக்களைத் தேர்தல் அலுவலர் பெற்றுக் கொள்வர். 

அன்று பகல் 2 மணி முதல், மனுத்தாக்கல் நிறைவடையும் வரை தொடர் வீடியோ பதிவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 28ம் தேதி மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. அதற்கு முன்பு வரை விண்ணப்பங்களில் தவறுகள் இருப்பின் திருத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்படும். 30ம்தேதி மனுக்கள் திரும்பப்பெற கடைசி நாள் ஆகும். வேட்பு மனுக்களை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். 

ஆனாலும் மனுத் தாக்கலுக்கு வேட்பாளர் நேரில் வர வேண்டும். 3 வாகனங்களில் வேட்பாளர் உள்பட 5 பேர், மனுத் தாக்கலின்போது அனுமதிக்கப்படுவர். பொதுத்தொகுதிக்கு ரூ.25 ஆயிரம், தனி தொகுதிக்கு ரூ.12 ஆயிரத்து 500 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பூத் ஸ்லிப் அச்சிடும் பணி வரும் 30ம் தேதி தொடங்கும். ஓட்டுப்பதிவுக்கு 5 நாட்களுக்கு முன்பு வீடு வீடாக விநியோகிக்கப்படும்.”

என்று தெரிவித்துள்ளார்.