தமிழக 'இ-சேவை’ மையங்களில் கலரில் 'உடனடி ' வாக்காளர் அட்டை!

Must read

சென்னை:
மிழகத்தில் உள்ள இசேவை மையங்களில் வாக்காளர் அடையாள அட்டை கலரில், அதுவும் உடனடியாக எடுத்து கொடுக்கப்படுகிறது. நேற்று முதல் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் சுமார் 330 இசேவை மையங்கள் உள்ளன. இதன் மூலம் வரி கட்டுவது உள்பட100 வகையான சேவைகள் பொதுமக்களுக்காக வழங்கப்பட்டு வருகிறது.
நேற்று முதல் ஆதார் அட்டை எடுக்காதவர்களுக்காக, அதை எடுக்கும் பணியும் இசென்டர் முலம் எடுக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே வாக்காளர் அடையாள அட்டை எடுத்து கொடுக்கும் செயல் நடைபெற்று வந்தது. ஆனால் நேற்று முதல் உடடினயாக, அதுவும் கலரில் படம் அச்சிடப்பட்டு கொடுக்கப்பட்டு வருகிறது.
இது பொதுமக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள 330 அதிகமான ‘இ-சேவை’ மையங்களில் இனி பிளாஸ்டிக் வண்ண வாக்காளர் அட்டை உடனுக்குடன் கிடைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இது குறித்து, அரசு கேபிள் டிவியின்  தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரிகள் கூறும்போது,  தமிழகத்தில் உள்ள ‘இ-சேவை’ மையங்களில் தற்போது, 100 வகையான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் சேவைகளின் எண்ணிக்கை 300 அதிகரிகப்படும்.
அதன் ஒரு பகுதியாக வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.
அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கீழ், 486 இ- சேவை மையங்கள் உள்ளன. இந்த நிறுவனத்தின் சார்பில் சென்னையில் சில இடங்களில் இந்த சேவை நேற்று தொடங்கியது.
இந்த சேவைக்காக வாக்காளர்களின் புகைப்படம் உள்ளிட்ட முழு விபரங்கள், தகவல் தொழில்நுட்ப துறையிடம், தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.
இ-சேவை மையங்களில் சென்று வாக்காளர் அட்டை எண்ணை தெரிவித்து, ரூ.25 கட்டணத்தில் பிளாஸ்டிக் வண்ண வாக்காளர் அடையாள அட்டை அச்சிட்டு தரப்படும்.
வாக்காளர் அட்டை தொலைந்தாலும் அதனுடைய எண்ணை தெரிவித்து புதிய அட்டையும் இங்கு பெற்றுக்கொள்ளலாம்.
தேர்தல் கமிஷன் தந்த அட்டையில் உள்ள புகைப்படம் தெளிவாக இல்லையெனில், புதிய புகைப்படத்தை இ-சேவை மையங்களின் சேவை வாயிலாக அங்கேயே எடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொதுவாக வாக்காளர் அட்டையாள அட்டையில் அச்சிடப்பட்டு இருக்கும் படம் தெளிவற்று காணப்படுவது வழக்கமானது. மேலும் பிழைகள் அதிகமாக காணப்படும்.
தற்போது அரசின் இ-சேவை மையம் மூலம் நமது தற்போதைய கலர் படங்கள் கொடுத்து, வேறு ஏதேனும் பிழைகள் இருந்தால் அதையும் நிவர்த்தி செய்து, புதிய வாக்காளர் அடையாள அட்டை, அதுவும் கலரில் உடனடியாக வாங்கிக்கொள்ளலாம்.  
பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி வாக்களர் அட்டையை மாற்றிக்கொள்ளலாம்.

More articles

Latest article