சென்னை

த்தரப்பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் மீது நடந்த வன்முறை தாக்குதலுக்குத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாஜக கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து நடக்கும் விவசாயிகள் போராட்டத்தில் ஒன்றாக உபி மாநிலத்தில் துணை முதல்வர் மற்றும் மத்திய இணை அமைச்சருக்குக் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடந்தது.   அப்போது அமைச்சரின் மகன் ஓட்டி வந்த கார் போராடும் விவசாயிகள் இடையே  புகுந்து சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர்.  அதையொட்டி நடந்த வன்முறையில் மேலும் 9 பேர் மரணமடைந்துள்ளனர்.

இதையொட்டி மரணமடைந்தோர் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்ல சென்ற காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.  அவர் மீது இதுவரை குற்றப்பத்திரிகை அல்லது வழக்குப் பதியப்படவில்லை.,   இதையொட்டி உ பி அரசுக்குப் பல எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது டிவிட்டரில், “

விவசாயச் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் உபி விவசாயிகள் மீதான தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது. விவசாயிகளின் மரணம் குறித்து பாரபட்சமற்ற, உயர்மட்ட விசாரணையை நான் கோருகிறேன். இந்தக் கொடூரச் செயலைச் செய்தவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்.

விவசாயிகளைச் சந்திக்க முயன்ற பிரியங்கா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விடுவிக்கப்பட்டு அவர்களின் ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும்.

மத்திய அரசு விவசாயிகளின் பிரச்சினைகள் மீது ம இனி அக்கறை காட்டாமல் இருக்க முடியாது இது போல அசம்பாவிதங்கள் தொடரக் கூடாது. மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வது மட்டுமே இயல்பு மற்றும் அமைதியை மீட்டெடுக்க ஒரே வழி என்பதை அரசு உணர வேண்டும்.

எனப் பதிந்துள்ளார்.