தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

தொழில் துறையினர் உள்ளிட்ட பலரை சந்திக்க இருக்கும் அவர் பல்வேறு அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்.

அந்த வகையில் நாளை சிங்கப்பூர் அமைச்சர் கே. சண்முகம் தலைமையில் சிங்கப்பூர் தமிழ்ச்சங்கம் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் வழக்கமான கருப்பு சிவப்பு நிறத்தில் இல்லாமல் பச்சை நிறத்தில் அமைந்திருப்பது அங்குள்ள திமுக-வினரிடையே வரவேற்ப்பை பெறவில்லை.

இதுகுறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் தங்கள் அதிர்ப்தியை பதிவு செய்துள்ளனர்.