கவர்னருடன் முதல்வர் திடீர் சந்திப்பு! அமைச்சரவை மாற்றமா?

Must read

சென்னை :

மிழக  கவர்னர் பன்வாரிலாலுடன் தமிழக முதல்வர் திடீரென சந்தித்து பேசினார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கவர்னர் மாளிகையில், கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று மாலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். இருவரின் சந்திப்பின் போது தலைமை செயலர் சண்முகம், டிஜிபி திரிபாதி ஆகியோர் உடன் இருந்தனர். சுமார் 30 நிமிடங்கள் வரை இச்சந்திப்பு நடந்தது.

இந்த நிலையில், தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்வது தொடர்பாக இச்சந்திப்பு நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்காகவே கவர்னரை சந்தித்து அவர் ஆலோசித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

More articles

Latest article