சென்னை
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மத்திய அர்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் எக்ஸ் தளத்தில்,
“தமிழகத்திற்கு எதிரான மத்திய அரசின் அணுகுமுறைக்கு எல்லையில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. தேசிய கல்விக்கொள்கை மற்றும் மும்மொழி கொள்கையை நிராகரித்ததற்காக, வெளிப்படையாக அச்சுறுத்த துவங்கியதுடன், தமிழக மாணவர்களுக்கான ரூ.2,152 கோடியை பறித்து வேறு மாநிலங்களுக்கு கொடுத்துள்ளனர்.
இது உரிமைக்காக போராடும் நமது மாணவர்களுக்கான தண்டனையே தவிர வேறு ஒன்றும் இல்லை.
இந்திய வரலாற்றில், எந்த மத்திய அரசும், அரசியல் பழிவாங்கலுக்காக கல்வி வாய்ப்பை நெரிக்கும் அளவுக்கு கொடூரமாக இருந்தது இல்லை. தமிழகம் மற்றும் அதன் மக்கள் மீது அநீதி மற்றும் வெறுப்பின் முகமாக பா.ஜ., தன்னை மீண்டும் நிரூபணம் செய்துள்ளது”
என்று பதிவிட்டுள்ளார்