சென்னை
தமிழக அரசு 18 வயதுக்கு கீழானோர் ஆன்லைனில் பணம் வைத்து விளையாட த்டை வித்துள்ளது
ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் பலர் பணத்தை இழக்கும் நிகழ்வுகள் தமிழகத்தில் தொடர் கதையாகி வருகின்றன. அதிகப்படியான பணத்தை இழப்பதன் மூலம் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளன. இதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வந்தனர்.
தமிழக அரசு பணம் கட்டி விளையாடும் ஆன்லைன் விளையாட்டு களை ஒழுங்குபடுத்தும் வகையில் கடுமையான விதிகளை அறிமுகப்படுத்தியதன் மூலம் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் பங்கேற்கும் சிறார்களுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், ‘ஆன்லைன் உண்மையான பண விளையாட்டு’ என்பது, தகவல் தொழில்நுட்பம் விதிகள், 2021-ன்படி, ‘வெற்றிகளை’ சம்பாதிக்கும் எதிர்பார்ப்புடன் ஒருவர் பணம் அல்லது பொருளை டெபாசிட் செய்யும் விளையாட்டு என வரையறுக்கப்படுகிறது. ஆன்லைன் விளையாட்டில் ஒரு வீரரின் செயல் திறனின் அடிப்படையில் ‘வெற்றிகள்’ பணமாகவோ அல்லது பொருளாகவோ பரிசுகளை வழங்குகின்றன அல்லது விநியோகிக்கப்பட வேண்டும் என்று விதிமுறைகள் தெளிவுபடுத்தி உள்ளன.