துரை

மிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று மதுரையில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்.

நடைபெற உள்ள. நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தி.மு.க. வேட்பாளர்கள், இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடக்கும் பிரசாரப் பொதுக்கூட்டங்களின் மூலம் வாக்குகள் சேகரித்து வருகின்றார்.

இன்று மாலை மதுரை நாடாளுமன்ற இந்தியா கூட்டணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்தும், சிவகங்கை காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்திற்கு ஆதரவு கேட்டும் மதுரை பாண்டிகோவில் ரிங்ரோட்டில் உள்ள கலைஞர் திடலில் பிரமாண்டமான பிரசாரக் கூட்டம் நடைபெறுகிறது.

இந்தப் பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். அதையொட்டி அவர் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் மாலை 5 மணிக்கு மதுரை வந்து கார் மூலம் கூட்டம் நடைபெறும் பகுதிக்கு வருகை தருகிறார்.

முதல்வருக்கு வரும் வழியில் கட்சியினர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க உள்ளனர். இந்தக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்கிறார்கள். பொதுக்கூட்டம் முடிந்த பின்னர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் தேனி செல்கிறார். கூட்டத்தையொட்டி அந்தப் பகுதியில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.