சென்னை,
டைபெற இருக்கும் தமிழக இடைத்தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிடும் என்று பா.ம.க தலைவர் ஜி.கே.மணி அறிவித்து உள்ளார்.
இதுகுறித்து நாமக்கல்லில் பேட்டி அளித்த மணி, நடைபெற்று முடிந்த சட்ட மன்ற தேர்தலை போலவே இந்த இடைத்தேர்தலிலும் பாமக தனித்தே போட்டியிடும் என்று கூறினார்.
pmk-13
போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் இன்னும் ஓரிரு நாளில் வெளியிடப்படும் என்றும் அப்போது கூறினார்.
கடந்த மே மாதம் நடைபெற்று முடிந்த  சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. எந்த கட்சி யுடனும் கூட்டணி சேரா மல் தனித்து போட்டியிட்டது. அந்த கட்சியின் முதல்-அமைச்சர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் அறி விக்கப்பட்டது. ஆனால் தேர்தலில் பா.ம.க.வுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.
இந்த நிலையில் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது.
அதிமுக மட்டும் வேட்பாளர்களை அறிவித்து உள்ளது. மற்ற  கட்சிகள் வேட்பாளர்களை இன்னும் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கவில்லை.
பா.ம.க.வை பொறுத்தவரை கடந்த தேர்தல் போலவே இந்த 3 தொகுதி தேர்தலிலும் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார்.
இடைத்தேர்தலில்  மக்கள் நலக்கூட்டணி, தமாகா போட்டியிடவில்லை என்று அறிவித்து விட்டது. இதன் காரணமாக திமுக, அதிமுக, பா.ம.க, பாரதியஜனதா கட்சிகள் தனித்தே போட்டியிடுகிறது.
இடைத்தேர்தலில் 4 முனை போட்டி நிலவும் என தெரிகிறது. போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.