சென்னை:
ம்னி பேருந்துங்கள் கடந்த ஆண்டு வசூலித்த கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பஸ்களில் கட்டணம் 2 மடங்கு உயர்த்தப்பட்டது. மேலும் ஆம்னி பஸ்கள் பெருங்களத்தூரில் ஆம்னி பஸ்கள் நிற்காது என்றும்  தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
buss27814
வழக்கத்துக்கு மாறாக  இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி  ஆம்னி பஸ்களில் கட்டணம்  2 மடங்கு அதிகமாக கட்டணம் உயர்த்தப்பட்டது பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்தது.
ஆனால் மற்றொரு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம், பஸ்களின் கட்டணத்தை உயர்த்தவில்லை’ என, அறிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது: சென்னையிலிருந்து இயங்கும், அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் சங்க நிர்வாகிகள், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆம்னி பஸ்களின் கட்டணம், 50 முதல், 130 ரூபாய் வரை உயர்த்தப்படுவதாக அறிவித்தனர்.
ஆனால், ‘இந்த கட்டண உயர்வு தங்களை கட்டுப்படுத்தாது; கட்டண உயர்வு தற்போது இல்லை’ என, மற்றொரு சங்கமான, தமிழக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
mdu-hight
மேலும், ஆறு மாதங்களுக்கு முன், 1 கி.மீ.,க்கு, 2.25 ரூபாய் கட்டண உயர்வை அமல்படுத்த, போக்குவரத்து துறைக்கு கடிதம் கொடுத்து உள்ளோம்.  அந்த கட்டணத்தின் படியே, தீபாவளி பண்டிகையின் போதும் வசூல் செய்யப்படும். தீபாவளி பண்டிகைக்கு ஆம்னி பஸ்களில் எந்த வித கட்டணமும் அதிகரிப்பு செய்யப்படவில்லை.
இவ்வாறு அவர்கள்கூறினர்.
ஆனால், பெரும்பாலான  ஆம்னி பஸ்களின் டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமே விற்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது  தீபாவளி கட்டண வசூலை கருதி, தற்போதைய நிலையில், அனைத்து பஸ்களின் டிக்கெட்டையும், பஸ்களின் உரிமையாளர்கள் பிளாக் செய்து விட்டனர். இதனால், ஆன்லைன் புக்கிங் செய்ய முடியாத நிலை உள்ளது. சில பஸ்களுக்கான டிக்கெட் கட்டணம், தற்போதைய கட்டணத்தை விட, இரண்டு மடங்கு அதிகரித்து, டிக்கெட் விற்பனை நடக்கிறது.
இந்த ஆம்னி பேருந்து கட்டண உயர்வுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.
thiru
ஆம்னி பஸ்களில் கட்டண உயர்வு குறித்து அரசு சார்பாக அறிவிக்காமல் ஆப்பரேட்டர்கள் சங்கத்தின் மூலமாக அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது.  ஆம்னி பேருந்துகள் இயக்குவதற்கும், கட்டண உயர்வு செய்வதற்கும் ஏதாவது ஒரு அடிப்படை இருக்க வேண்டும். சில வரைமுறைகளுக்குட்பட்டு இப்பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தை நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் ஆகியோர் தாமாக முன்வந்து (சூமோட்டோ) பொதுநல வழக்காக எடுத்து நேற்று விசாரித்தனர்.
அப்போது மதுரை வடக்கு வட்டார போக்குவரத்து அதிகாரி கல்யாணகுமார் கோர்ட்டில் ஆஜராகி இருந்தார். அவரிடம் ஆம்னி பஸ்களில் எந்த அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், ‘ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் கட்டணத்தை நிர்ணயித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. போக்குவரத்து அதிகாரிகளிடம் கட்டணம் நிர்ணயம் தொடர்பாக எதையும் கேட்கவில்லை’ என்றார்.
மேலும், விழாக்காலங்களில் ஆம்னி பஸ்களில் சோதனை நடத்தி விதிமீறல்கள் இருப்பின் அபராதம் விதிப்பதாக வும் அவர் தெரிவித்தார். அப்போது நீதிபதிகள், ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது சம்பந்தமாக ஏதேனும் நடவடிக்கை எடுக்க இயலுமா என்று கேள்வி எழுப்பினர்.
courtr
கட்டண நிர்ணயம் தொடர்பாக அரசாணை இல்லாததால் அதுசம்பந்தமாக நடவடிக்கை எடுக்க இயலாது என்று வட்டார போக்குவரத்து அதிகாரி தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, பிற மாநிலங்களில் ஆம்னி பஸ்களின் கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்துள்ள நிலையில், தமிழக அரசு ஏன் கட்டணத்தை நிர்ணயம் செய்யவில்லை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இன்று நடைபெற்ற விசாரணையை அடுத்து,  ஆம்னி பஸ்கள் கடந்த ஆண்டு வசூலித்த கட்டணத்தையே இந்த ஆண்டும் வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.