சென்னை: தமிழக பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி விவரங்கள் வெளியாகி உள்ளது. மேலும் சித்தா பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதிமுக உறுப்பினர்களின் அமளிக்கிடையே தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முதன்முதலாக காகிதமில்லா இ-பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்யும், தமிழகத்தின் நிதிநிலை சிக்கலை சரிசெய்ய மூன்று ஆண்டுகள் ஆகும் என்றும் ஒரே ஆண்டில் செய்து முடிக்க முடியாத அளவுக்கு பணி மிகக் கடுமையாக என்று கூறினார்.
பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது என்பது குறித்து விவரம்:
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித்திட்டத்திற்கு ரூ.959.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
108 ஆம்புலன்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் என்றும், மொத்த எண்ணிக்கை 1303 ஆக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு ரூ.1,046,09 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் சித்தா பல்கலைக்கழகம் அமைக்கப்படும். அதற்காக ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு மொத்தம் ரூ.18,933,20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.