சென்னை: அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பை சரிய வேண்டும் என சட்டசபையில் பட்ஜெட்டை தாக்கல் செய்த  நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் கூறினார்.

ஸ்டாலின் தலைமையிலான தமிழகஅரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அரசின் நிதிநிலையை சீர்படுத்துவோம் என்று மக்களுக்கு நாங்கள் வாக்குறுதி அளித்துள்ளோம். தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை முன்னுரிமை அளித்து படிப்படியாக நிறைவேற்றுவோம் என்று கூயி அமைச்சர்,  ஒரே ஆண்டில் செய்து முடிக்க இயலாத அளவுக்கு பணி மிக கடுமையாக உள்ளது. எனவே, நிதிநிலை சிக்கலை செய்து முடிக்க 2,3 ஆண்டுகள் வரை ஆகும் என தெரிவித்தார்.

மேலும், கடந்த அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதை  சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் தமிழக அரசு உள்ளது என்று கூறியவர்,

2021-22ல் வருவாய் பற்றாக்குறை ரூ.58,692.68 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.

மேலும், 2021-22ல் நிதி பற்றாக்குறை ரூ.92,529.43 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது என்றும் கூறினார்.