சென்னை:  தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்ற ச்சம்பவங்களில் ஈடுபடுவோருக்கும், பாலியல் தொல்லைகள் கொடுப்போருக்கம்  கடும் தண்டனை வழங்கும்  இரண்டு சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அந்த சட்டங்கள்  அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிக தண்டனை விதிக்கும் வகையில் சட்டப்பேரவையில் நிறைவேறிய சட்ட திருத்தம், ஆளுநரின் ஒப்புதலை அடுத்து அரசிதழில் வெளியாகியுள்ளது. கடந்த 25ம் தேதி ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில், அன்றைய தேதியில் இருந்து அமலுக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த குற்றங்களுக்கு முதல் தண்டனையாக 5 ஆண்டு சிறை தண்டனை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும், இரண்டாவது அல்லது தொடர்ச்சியான தண்டனையாக 10 ஆண்டு சிறை தண்டனை, 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி நிலையங்கள், விடுதி, திரையரங்கு, வணிக வளாகங்கள் போன்ற பொது இடங்களில் போதிய மின்விளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் எனவும், குற்ற சம்பவங்கள் நடந்த 24 மணி நேரத்தில் காவல் நிலையங்களுக்கு தகவல் அளிக்க வேண்டும் எனவும் அச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்கும் தமிழ்நாடு அரசின் திருத்த மசோதாகளுக்கு ஆளுநர் ஒப்புதல்!