டெல்டா மாவட்டத்தை வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தி தமாகா ஆர்ப்பாட்டம்

Must read

திருவாரூர்:

டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரி த.மா.கா சார்பில் திருவாரூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள  பெரியார் சிலை அருகே, தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட இளைஞர் அணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தின்போது, “காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். பெட்ரோல் – டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும். டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும்” போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி  ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தை த.மா.கா. மாவட்ட தலைவர் குடவாசல் தினகரன் தலைமை தாங்கி நடத்தினார். அவருடன் இளைஞர் அணி தலைவர் சங்கர் உள்பட மாவட்ட நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

 

More articles

Latest article