புதுடெல்லி: கேதர்நாத் மற்றும் பத்ரிநாத் போன்ற வழிபாட்டு தலங்களுக்கு, தேர்தல் நடக்கும் சமயத்தில் மோடி சென்றது அப்பட்டமான தேர்தல் விதிமுறை மீறல் என்று தேர்தல் கமிஷனில் புகார் அளித்துள்ளது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி.

அக்கட்சியின் சார்பில் கூறப்பட்டிருப்பதாவது; தேர்தல் இன்னும் முடியாத சூழலில், மோடியின் பயணம் அமைந்துள்ளது. அவரது பயணத்தின் ஒவ்வொரு நிகழ்வும், ஒவ்வொரு அசைவும் மிக வெளிப்படையாக விளம்பரப்படுத்தப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டன.

இது வாக்காளர்களை கவருவதற்கான ஒரு மோசமான மறைமுக உத்தி. ஆனால், மோடியின் அப்பட்டமான விதிமுறை மீறல்கள் தொடர்பாக தேர்தல் கமிஷன் எதையும் கண்டுகொள்வதில்லை” என்று கூறப்பட்டுள்ளது.

தனது 2 நாள் வழிபாட்டு பயணத்தை, மிகவும் ஆடம்பரமாகவும், படாடோபமாகவும், ஒவ்வொன்றையும் விளம்பரப்படுத்தியும் மேற்கொண்டார் நரேந்திர மோடி என்பதை கவனிக்க வேண்டியுள்ளது.