ராமநாதசுவாமி திருக்கோயில் – திருக்கண்ணபுரம்,திருவாரூர் மாவட்டம்
நன்னிலத்தில் இருந்து சுமார் 10 கி.மி. தொலைவில் உள்ள திருப்புகலூரில் இருந்து முடிகொண்டான் ஆற்றைக் கடந்து, திருக்கண்ணபுரம் சென்று கிழக்கே சென்றால் இத்தலத்தை அடையலாம். திருப்புகலூரில் இருந்து 2 கி.மி. தொலைவிலும், திருச்செங்காட்டங்குடி தலத்திலிருந்து 3 கி.மீ. தொலைவிலும் இத்தலம் உள்ளது. இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.
சுவாமிக்கு தீபாராதனை செய்யும்போது லிங்கத்திருமேனியில் ஜோதி வடிவம் தெரிவது விசேஷம். இராமர் பிரம்மஹத்தி தோஷம் நீங்க ராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்த அவர், அயோத்தி திரும்பும் வழியில் இங்கு சிவ வழிபாடு செய்தார். தற்போதும் சாயரட்சை பூஜையை இராமரே செய்வதாக ஐதீகம்.
இத்தலத்திலிருந்து சற்று தூரத்தில் 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றான அருள்மிகு சௌரிராசப் பெருமாள் கோயில் உள்ளது.
இராமர் வழிபட்ட தலமென்பதால் இங்கு சிவனுக்கு அந்நாளில் விசேஷ பூஜை நடத்தப்படுகிறது. தற்போதும் சாயரட்சை பூஜையை இராமரே செய்வதாக ஐதீகம். இவ்வேளையில் சுவாமி தரிசனம் செய்வது விசேஷம். சுவாமிக்கு தீபாராதனை செய்யும்போது லிங்கத்திருமேனியில் ஜோதி வடிவம் தெரிவது விசேஷம்.
இப்பகுதியை ஆட்சி செய்த மன்னருக்கு புத்திரப்பேறு இல்லை. சிவபக்தரான அவர் குழந்தை வேண்டி சிவனுக்கு யாகம் நடத்தினார். சிவன், அசரீரியாக அம்பிகையே அவருக்கு மகளாக பிறப்பாள் என்று அருளினார். வனத்திற்கு மன்னர் வேட்டையாடச் சென்ற போது 4 பெண் குழந்தைகளை கண்டார். குழந்தைகளை எடுத்து வளர்த்தார். அவர்கள் பிறப்பிலேயே சிவபக்தைகளாக திகழ்ந்தனர்.
தகுந்த பருவத்தில் சிவன் அவர்களை மணந்து கொண்டார். இந்த அம்பிகையர் நால்வரும் இத்தலத்தில் அம்பிகை சரிவார் குழலியாகவும், திருச்செங்காட்டங்குடியில் வாய்த்த திருகுகுழல் நாயகி, திருப்புகலூரில் கருந்தாழ் குழலியம்மை, திருமருகல் தலத்தில் வண்டார் குழலியம்மையாகவும் நான்கு தலங்களில் காட்சி தருகின்றனர்.
இந்த அம்பிகையர் நால்வருக்கும், “சூலிகாம்பாள்’ என்ற பொது பெயர் உள்ளது. இப்பகுதியில் வசித்த அம்பாள் பக்தையான பெண் ஒருத்தி கர்ப்பமடைந்தாள். ஒருநாள் இரவில் அவளது தாயார் வெளியில் சென்றுவிட்டாள்,அன்றிரவில் பலத்த மழை பெய்யவே, அவளால் கரையைக் கடந்து வீடு திரும்ப முடியவில்லை. அப்போது அம்பிகையே அவளது தாயார் வடிவில் சென்று பிரசவம் பார்த்தாள். இதனாலேயே நான்கு தலங்களிலுள்ள அம்பிகைக்கும் “சூலிகாம்பாள்’ என்ற பெயர் ஏற்பட்டது.
சூல்’ என்றால் “கரு’ என்று பொருள். “கரு காத்த அம்பிகை’ என்றும் இவளுக்கு பெயர் உண்டு. திருக்கண்ணபுரம், திருச்செங்காட்டங்குடி, திருப்புகலூர், திருமருகல் இந்த நான்கு தலங்களிலும் அம்பாள் சன்னதி வெளியில் தனியே அமைந்துள்ளது.
கருவறையிலுள்ள மூலவர் சிவலிங்கத் திருமேனி பெரியது. உயரமான பெரிய சுற்றுடைய ஆவுடையாருடன் கூடிய உயர்ந்த பாணத்துடன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்பாள் சரிவார்குழலி சந்நிதி அமைந்திருக்கிறது. அம்பாள் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளாள்