சென்னை:

திருவாரூர்  தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்க கோரி கம்யூனிஸ்டு கட்சி எம்.பி. டி.ராஜா தாக்கல் செய்த மனுவை உச்சநீதி மன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. இதன் காரணமாக தேர்தல் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

சென்னை உயர்நீதி மன்றத்தில் திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளி வைக்க கோரி தாக்கல் செய்த தாக்கல் செய்யப்பட்ட மனுமீது தடை விதிக்க சென்னை உயர்நீதி மன்றம் மறுத்து விட்டது. இந்த நிலையில் உச்சநீதி மன்றத்தில் நேற்று டி.ராஜா தாக்கல் செய்த மனுவையும் அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதி மன்றம் மறுத்து விட்டது.

இந்த நிலையில், தேர்தல் நடைமுறை தொடங்கப்பட்டுள்ள நிலையில், அவசர வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதியிடம் வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில், மனுவை விசாரிக்க  உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதன் காரணமாக மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என தெரிகிறது.

தி.மு.கவின் முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞர்கருணாநிதி மறைவையடுத்து, காலியாக அறிவிக்கப்பட்ட திருவாரூர் தொகுதிக்கு வருகிற ஜனவரி28ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தொடர்ந்து, இந்த தேர்தலுக் கானவேட்புமனுத் தாக்கல் நேற்று தொடங்கி வருகிற ஜனவரி 10ம் தேதியுடன்நிறைவு பெறுகிறது.

இந்நிலையில் திருவாரூர் தொகுதி தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் இந்தியகம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.ராஜா உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்தார். கஜாபுயல் நிவாரணப்பணிகள் நடைபெற்று வருவதால் திருவாரூர் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் எனவும், தற்போதைய சூழ்நிலையில் இடைத்தேர்தல் நடந்தால் முறைகேடுகள் நடக்க வாய்ப்பிருப்பதாகவும் அவர் அளித்த மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளதாக இன்று அறிவித்துள்ளது. விரைவில் இவ்வழக்கு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.