திருவண்ணாமலை: 
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஜன.17, 18 ஆகி தேதிகளில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வார நாட்களில் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என பல்வேறு நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுத்து வருகிறது.
அத்துடன் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்களில் பக்தர்களின் தரிசனத்துக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது இன்று முதல் 18 ஆம் தேதி வரை கோயில்களில் சாமி தரிசனத்துக்குத் தடை விதிக்கப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசின் இந்த அறிவிப்பையடுத்து வரும் 17, 18 ஆம் தேதிகளில் கிரிவலம் செல்ல தடைவிதிக்கப்படுவதாகத் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக 31.01.2022 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. அத்துடன் ஜனவரி .14 முதல் ஜனவரி 18 வரை அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.