திருப்பூர்:

திருப்பூரில் அதிமுக ( அம்மா அணி)  எம்.எல்.ஏ., குணசேகரன்,  அரசுத்திட்டங்களை செயல்படுத்த அதிகாரிகள் ஒத்துழைப்பதில்லை என்று தெரிவித்து  திடீரென உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

ரிசார்ட்டில் சத்துணவு போடப்படுவதாக சொன்னபோது. குணசேகரன்

திருப்பூர் குமரன் நினைவகம் அருகே திருப்பூர் தெற்கு தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., குணசேகரன் திடீர் என உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அரசு திட்டங்களை செயல்படுத்த அதிகாரிகள் ஒத்துழைப்பு தரவில்லை என புகார் தெரிவித்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார்.

சசிகலா அணியைச் சேர்ந்தவர் குணசேகரன். இந்த அணியைச் சேர்ந்தவர்கள் சென்னை கூவத்தூர் ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தபோது, :எங்களை அடைத்துவைக்கவில்லை. எங்களை நன்றாக கவனித்துக்கொள்கிறார்கள். தலைவலி கூட வந்துவிடக்கூடாது என்பதற்காக சத்துணவாக அளிக்கிறார்கள்” என்று ஊடகங்களில் தெரிவித்தார். இந்த “சத்துணவு போடுகிறார்கள்” என்ற வார்த்தை அப்போது பிரபலமானது.

“தற்போதைய தமிழக ஆட்சி கலைக்கப்பட்டு, விரைவில் பொதுத்தேர்தல் வரலாம் என்று ஒரு யூகச் செய்தி பரவிவருகிறது. ஆகவே சசிகலா – டிடிவி தினகரன் அணியில் இருந்தால் மக்கள் எதிர்பார்கள் என்று எண்ணி  மக்களுக்காக உண்ணாவிரதம் என நாடகமாடுகிறார்” என்று திருப்பூர் பகுதியில் பேசப்படுகிறது.

மேலும், இதையே காரணமாகச் சொல்லி ஓ.பி.எஸ். அணிக்கு தாவவும் குணசேகரன் முயற்சிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.