சென்னை,
சென்னையில் இன்று காலை சுமார் 9 மணி அளவில் திடீர் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
கிண்டி கத்திப்பாரா ஜங்ஷனில் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது,.‘
விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் சென்னை கிண்டியில் திடீர் சாலை மறியல் நடைபெற்று வருகிறது.
இயக்குநர் கவுதமன் தலைமையில் தமிழ் இளைஞர்கள் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சாலையை மறித்து சங்கிலியால் கட்டி போக்குவரத்தை தடை செய்துள்ளனர்.
இதன் காரணமாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையே ஸ்தம்பித்து போய் உள்ளது.