திருப்பூர்.
திருப்பூரில் போதையில் பள்ளிக்கு வந்த மாணவர்களை 10 நாட்கள் தற்காலிக இடை நீக்கம் செய்து மாவட்ட கல்வித்துறை நடவடிக்கை எடுத்து உள்ளது.
திருப்பூரில் வகுப்பறைக்கு மது போதையில் வந்த அரசு பள்ளி மாணவர்களை இடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர் ராயபுரம் பகுதியில் நஞ்சப்பா அரசு ஆண்கள் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும் மாணவர்கள் சிலர் நேற்று பள்ளிக்கு மது அருந்திவிட்டு வந்ததாகவும், பள்ளி வளாகத்திலேயே வெடி வெடித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் மாணவர்களை எச்சரித்து பெற்றோருடன் வரும்படி பள்ளியின் தலைமை ஆசிரியர் உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் குறித்து மாவட்ட கல்வி அதிகாரி முருகன் விசாரணை மேற்கொண்டார்.
tirupur
பின்னர் சம்பவத்தில் ஈடுபட்ட ஒன்பது, பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் 5 பேரை 10 நாட்கள் இடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை அருகே உள்ள திருவள்ளுரில் அரசு பள்ளி மாணவர்கள் மது அருந்தி பள்ளிக்கு வந்து ஆசிரியை கிண்டல் செய்தது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசின் டாஸ்மாக் மோகம் பள்ளி மாணவர்களை சீரழித்து வருவது தொடர்கதையாகி வருகிறது….