திருப்பதி தெப்பக்குளம்

திருமலை,

திருப்பதியில் வருடாந்திர பிரமோற்சவத்தை முன்னிட்டு கோவில் தெப்பக்குளத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தெப்பக்குளம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.

திருப்பதியில் வரும் அக்டோபர் 3ம்தேதி முதல் 11ம் தேதிவரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. திருப்பதியில் புரட்டாசி மாதம் நடைபெறும் பிரமோற்சவம் உலகபிரசித்தி பெற்றது. லட்சக்கணக்னான பக்தர்கள் திருப்பதிக்கு படையெடுத்து வருவார்கள்.

பிரம்மோற்சவத்தை முன்னிட்டு பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தெப்பக்குளத்தில் குளிக்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் பிரம்மோற்சவத்துக்கு முன்னதாக கோயில் தெப்பக்குளம் மூடப்பட்டு, அதில் உள்ள நீர் வெளியேற்றப்பட்டு, குளம் சுத்தம் செய்து புதிய தண்ணீர் நிரப்புவது வழக்கம்.

அதன்படி இந்தாண்டு பிரம்மோற்சவத்துக்காக தெப்பக்குளத்தில் ஆகஸ்ட் 1ம்தேதி முதல் 30ம்தேதிவரை ஒரு மாதம் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

தெப்பக்குளத்தில் உள்ள தண்ணீரை வெளியேற்றி, பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளதால் குளம் மூடப்பட்டுள்ளது.

இவ்வாறு தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.