திருப்பதி

திருப்பதி மலையில் இலவச தரிசன கூட்டம் அதிகமாக உள்ளதால் பக்தர்கள் 4 நாட்கள் காத்திருக்க வேண்டும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

file pic

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த திருப்பதி மலையில் இலவச தரிசன டிக்கட்டுகள் ஆனலைன் மூலம் மட்டுமே வழங்கப்பட்டு வந்தன.  தற்போது பரவல் குறைந்துள்ளதால் ஓராண்டுக்கு பிறகு மீண்டும் நேரடியாக திருப்பதியில் உள்ள பூதேவி க்வளகம், பேருந்து நிலையம் எதிரே உள்ள பக்தர்கள் ஓய்வரை, ரயில் நிலையம் பின் உள்ள சத்திரம் ஆகிய இடங்களில் இலவச டிக்கட்டுகள் வழங்கப்படுகின்றன.

கடந்த 15 ஆம் தேதி முதல் வழங்கப்படும் இலவச டிக்கட்டுகள் தினசரி 10000 என வழங்கப்படுகின்றன.  பக்தர்கள் இந்த டிக்கட்டுகளை பெற்ற மறுநாள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.    இலவச டிக்கட்டுகளைப் பெற தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு வந்தபடி உள்ளனர்.   பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அடுத்தடுத்த நாட்களுக்கான டிக்கட்டுகள் வழங்கப்படுகின்றன.

அவ்வகையில் சுமார் 4 நாட்கள் பக்தர்கள் காத்திருக்க வேண்டி உள்ளது.   அதாவது இன்று 20 ஆம் தேதி வழங்கப்படும் டிக்கட்டுகள் மூலம் பக்தர்கள் 24 ஆம் தேதி அன்று தான் தரிசனம் செய்ய முடியும் எனனும் நிலை உள்ளது.  இதையொட்டி தேவஸ்தானம் இலவச தரிசனத்துக்கு வருவோர் 4 நாட்கள் காத்திருக்க வேண்டும் எனவும் அதற்குத் தயாராக வரவேண்டும் எனவும் அறிவித்துள்ளது.