சென்னை:
உடல்நலக்குறைவால் காலமான தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி (84) உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
திண்டிவனம் ராமமூர்த்தியின் உடல் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள், தொண்டர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திண்டிவனம் ராமமூர்த்தி உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். முதல்வர் ஸ்டாலினுடன், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்/நேரு மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.