கொரோனா பரவல்: சேலத்தில் புதிய கட்டுப்பாடு

Must read

சேலம்:
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த சேலத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் படிப்படியாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்துள்ளது. 3-ஆம் அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதால் பாதிப்பு குறைவாக இருக்கும் போதே கட்டுக்குள் கொண்டு வருமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தினார். அதன் படி கோவை, சென்னை, திருப்பூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக பட்டுள்ளன.

இந்த நிலையில், ஈரோடு மாவட்டத்திலும் புதிய கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன் படி, அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்படும் என்றும், தேநீர் கடைகள் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பார்சல் சேவைகளுடன் இயங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உணவகங்களும் காலை 6 மணி முதல் 5 மணி வரை 50% வாடிக்கையாளர்களுடன் இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறைகள் இன்று முதல் அமல் படுத்தப் படுகின்றன.

More articles

Latest article