கவுகாத்தி:

ட மாநிலங்களில் பெய்து வரும் பருவ மழை காரணமாக பீகார், அஸ்ஸாம் போன்ற மாநிலங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன.

அஸ்ஸாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, அங்குள்ள பிரம்மபுத்திரா உள்பட பல நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஒடுகிறது. பல கிராமங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து உள்ளதால் பொதுமக்களை அக்கிருந்து மீட்கும் பணியில் ராணுவத்தினரும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், வன விலங்குகளுக்கான சிறந்த வாழிடம் என்ற விருதை பெற்றுள்ள  அஸ்ஸாம் காஷிரங்கா தேசிய பூங்காவும் சுமார் 80 சதவிகிதம் தண்ணீரில் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக  பல மிருகங்கள் தண்ணீரில் சிக்கி உயிரிழந்து உள்ள நிலையில், பல விலங்கு கள்  உயிர் பிழைக்கும் நோக்கில், பூங்காவைத் தாண்டி அருகிலுள்ள ஊருக்குள் புகுந்துள்ளதாகவும் தகவல்  வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், அந்த பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் புகுந்த புலி, அங்குள்ள படுக்கையில் ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் காட்சி வெளியாகி உள்ளது. இந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது.

மனிதர்களின் ஒருபுறம் இயற்கையை அழித்து வரும் நிலையில், இயற்கையின்  சீற்றத்தில் இருந்து தப்பிக்க வேண்டி, மனிதர்களின் இடப்பிடத்திற்கு  வந்து தஞ்சம் அடைந்து உள்ளது இந்த வனவிலங்கு…