‘துப்பறிவாளன் 2’ படத்துக்கு லொக்கேஷன் தேடி லண்டன் செல்கிறது படக்குழு

Must read

நடிகர் விஷால் இயக்குனராக அவதாரமெடுக்கும் முதல் படம் துப்பறிவாளன்-2. மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன்-1ல் நடித்திருந்தார் விஷால்.

2019 நவம்பரில் துவங்கிய இரண்டாவது பார்ட்டின் படப்பிடிப்பின் போது மிஷ்கினுக்கும் விஷாலுக்கும் இடையில் பட்ஜெட் காரணமாக ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் படம் கைவிடப்பட்டது.

2020 நவம்பரில் இதனை தயாரித்து இயக்கப்போவதாக நடிகர் விஷால் அறிவித்ததோடு முதல் கட்ட படப்பிடிப்பையும் துவங்கினார்.

வெளிநாட்டில் சென்று படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருந்த சில காட்சிகளின் படப்பிடிப்பு கொரோனா பரவல் காரணமாக தாமதமானதால் தற்போது அந்த காட்சிகளை படமாக்க திட்டமிட்டிருக்கிறது படக்குழு.

இதற்காக 2022 ஜனவரி மாதம் லண்டன் சென்று காட்சிகளுக்கு ஏற்ற இடங்களை தெரிவு செய்யவதோடு கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து அறியவும் இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது, இதனைத் தொடர்ந்து 2022 ஏப்ரல் முதல் வெளிநாட்டு படப்பிடிப்பு நடைபெறும் என்று கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் விஷாலுடன், பிரசன்னா, அஷ்யா, ரகுமான் ஆகியோர் நடிக்கின்றனர், இளையராஜா இசையமைக்கிறார்.

More articles

Latest article