பிரபு தேவா நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் அடுத்தடுத்து வசூலை ஏற்படுத்தி தருவதால், அவரை வைத்து படமெடுக்க போட்டிபோட்டு வருகின்றனர்.

ஹரிகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் தேள் படத்தில் சம்யுக்தா ஹெக்டேவுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார் பிரபு தேவா.

ஸ்டூடியோ க்ரீன் கே.இ.ஞானவேல்ராஜா தாயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் யோகி பாபு, ஈஸ்வரி ராவ் ஆகியோர் நடித்துள்ளனர்.

திரையுலகில் டான்ஸ் மாஸ்டராக அறிமுகமாகி, தமிழில் சில படங்களில் ஹீரோவாக நடித்துவந்த பிரபு தேவா, சல்மான் கானை வைத்து பாலிவுட்டில் பல படங்களை இயக்கியுள்ளார்.

சமீப ஆண்டுகளாக இயக்கத்தில் இருந்து மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கியிருக்கும் பிரபு தேவா இந்தப் படத்தில் ரவுடியாக நடிக்கிறார்.

இந்த வாரம் வெள்ளிக்கிழமை (டிச. 10ம் தேதி) ரிலீசுக்கு தாயாராகிவரும் தேள் திரைப்படம் பிரபு தேவா ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.