சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காலை 9.30 மணி அளவில் வெளியிட்டுள்ள தகவலின்படி, குமரி, நெல்லை மாவட்டங்களில் அடுத்த 2மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து உள்ளது.
அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி  உருவாகி உள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற உள்ளதாகவும், நாளை மறுதினம் வலுவான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் 13ந்தேதி  முதல் 16-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வரை ஓரிரு இடங்களில் கன மழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர்.
இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காலை  0916 மணிக்கு விடுத்துள்ள எச்சரிக்கையின்படி, அடுத்த இரண்டு மணி நேரத்தில் கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்து உள்ளது.