சென்னை: சென்னை மாநகரில் தனி வீடுகள், கல்வி நிறுவனங்கள், வணிக சொத்துகள் வைத்திருப்பவர்கள் விரைவில் அதிக சொத்து வரி செலுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அதிக அளவிலான வரி பாக்கி வைத்துள்ளவர்களின் பட்டியலையும் வெளியிட்டு உள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்,  குறைவாக மதிப்பிடப்பட்ட கட்டிடங்களை சொத்து வரி கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணியை அவுட்சோர்சிங் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கை முடிந்ததும், சுமார் தனி வீடுகள், வணிக நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் உள்பட தனியார் சொத்துக்களுக்கான வரி மேலும் பல மடங்கு உயர வாய்ப்பு உள்ளது. ,இதன் மூலம் சுமார் 3 லட்சம் பேர் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழ்நாடு முழுவதும் சொத்து வரி, குடிநீர் கழிவுநீர் வரி, மின்சார கட்டணம் உள்பட பல வரிகள் உயர்த்தப்பட்டு உள்ளன. சென்னை போன்ற நகர்ப்புற பகுதிகளில் சொத்து வரி குறைந்த பட்சம் 50 சதவிகிதம் முதல் 100 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. இது சாமானிய மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், தற்போது, சொந்த வீடு வைத்திருப்பவர்களுக்கு பேரதிர்ச்சியை தர சென்னை மாநகராட்சியும், தமிழகஅரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து கூறிய வருவாய் மற்றும் நிதித்துறை துணை ஆணையர் விசு மகாஜன், சென்னையில்,  பல கட்டிடங்கள் புனரமைப்பு அல்லது மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளன, அவை இன்னும் மதிப்பீடு செய்யப்படவில்லை. தற்போது அவை, ஜிஐஎஸ் மேப்பிங்கின் உதவியுடன் மறுமதிப்பீடு செய்யப்பட உள்ளது. இதற்கான பணி அவுட்சோர்சிங் முறையில் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் அரையாண்டுக்கு 120 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுசிகறது. அதாவது, தற்போது சொத்து வரியில் இருந்து, மேலும்,  50% ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கடனில் தத்தளித்து வரும், சென்னை மாநகராட்சியின் நிலுவைத் தொகை  பலஆயிரம் கோடி ரூபாயாக இருப்பதால், அதை ஈடுபட்ட வரிகளை கூட்டுவது அவசியமாகிறது என்று கூறியவர், இந்த கூடுதல் வருவாய் அதை ஈடுகட்ட உதவும் என நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

மேலும், அவுட்சோர்சிங் குறித்து கூறிய துணைஆணையர், ஏற்கனவே கட்டிடங்களை மதிப்பீடு செய்து, அவுட்சோர்ஸ் வருவாய் வசூல் நடவடிக்கை ராஞ்சி போன்ற சில இடங்களில்  நடைபெற்று வருவதாக கூறும் அதிகாரிகள், அவுட்சோர்சிங் மதிப்பிடும் நடவடிக்கை தமிழ்நாட்டில் முழுமையாக அமல்படுத்தப்படுமா என்பது தமிழகஅரசின் முடிவை பொறுத்தது.. “அவுட்சோர்சிங் வரி வசூல் ஏதேனும் விரும்பத்தகாத சம்பவங்களை ஏற்படுத்துமா என்பதையும் நாங்கள் பார்க்க வேண்டும். இரண்டாவதாக, வரி வசூல் என்பது மாநிலத்தின் இறையாண்மையான கடமையாகும், அது அவுட்சோர்சிங் என்று வரும்போது கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்றார்.

இது குறித்து கூறிய மாநகராட்சி கணக்கு நிலைக்குழு தலைவர் கே தனசேகரன்,  பல கல்வி நிறுவனங்கள் மற்றும் தங்க ஷோரூம்கள் போன்ற வணிக நிறுவனங்கள் அதிக அளவில் விதிமீறல் செய்கின்றனர்.   “சில தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டுமானங்களைச் செய்துள்ளன, அவை வரைபடமாக்கப்பட வேண்டும். இந்த நிறுவனங்களும் வரி செலுத்தாதவர்கள். அதிக கடன் செலுத்தாதவர்களிடம் இருந்து வரி வசூலிக்க தனியார் ஏஜென்சிகளை மாநகராட்சி பயன்படுத்த வேண்டும்,” என்றார்.

மேலும், இதற்கு ஆதார் இணைப்பது அவசியம் என்றவர்,  சொத்து பதிவு மற்றும் சொத்து வரி செலுத்துதலுடன் ஆதாரை இணைப்பது போன்ற பல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதுடன்,   “ஒரு நபர் ஒரு புதிய கட்டிடத்திற்கு பதிவு செய்யும் போது, அவரது ஆதார் சொத்து வரி செலுத்துதலுடன் இணைக்கப்பட்டிருந்தால், அதிகாரிகள் அவரது இயல்புநிலை நிலையை கண்டறிய முடியும் மற்றும் அவர் பணம் செலுத்தும் வரை புதிய பதிவுக்கான தடையில்லா சான்றிதழை நிறுத்தி வைக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

 இதற்கிடையில், ₹25 லட்சத்துக்கு மேல் நிலுவை வைத்துள்ள 39 உயர் சொத்து வரி செலுத்தாதவர்களின் பெயரை மாநகராட்சி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.  கடன் செலுத்தாத வர்களில், மார்டெக் பெரிஃபெரல்ஸ் குடிமை அமைப்பிற்கு ₹3.3 கோடியும், சிட்டி டவர் ஹோட்டல் ₹2 கோடியும், டிஎம்பி அன்வர் அலி ₹1.7 கோடியும், ரங்கா பிள்ளை ₹1.1 கோடியும், பி உஷா ₹1 கோடியும் செலுத்த வேண்டும்.

பச்சையப்பாஸ் அறக்கட்டளை வாரியம் ₹63 லட்சமும், மீனாட்சி மகளிர் கல்லூரிக்கு ₹53 லட்சமும், சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் ₹47 லட்சமும், பிரசிடென்சி கிளப் ₹38 லட்சமும் பாக்கி வைத்துள்ளது. மெத்தம்  ₹24 கோடி பாக்கி வைத்துள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.