நியூயார்க்:

நாசாவின் வருடாந்திர சவால் போட்டியில் இந்தியாவின் 3 குழுக்கள் விருது பெற்றுள்ளன.


நாசாவில் நடைபெற்ற வருடாந்திர புதிய கண்டுபிடிப்புகளுக்கான சவால் போட்டியில் உயர்நிலை மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.

எதிர்காலத்தில் சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்படும் விண்கலத்தை தயாரித்து சோதிக்க வேண்டும்.

இந்த சவாலில் உத்தரப்பிரதேசம் காய்ஜாபாத்தைச் சேர்ந்த கேஐஇடி கல்வி நிறுவன மாணவர்கள் வெற்றி பெற்று, நெயில் ஆம்ஸ்ட்ராங் விருதைப் பெற்றனர்.

பிரச்சினைகளை புத்தி கூர்மையுடனும், நிலைத்தன்மையுடனும் சமாளிக்கும் போட்டியில் மும்பையைச் சேர்ந்த முகேஷ் பட்டேல் பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஃப்ராங் ஜியோ செக்ஸ்டான் நினைவு விருதை பெற்றனர். அதோடு பாதுகாப்பு முறை சவால் விருதையும் பெற்றனர்.

பஞ்சாபில் உள்ள லவ்லி ப்ரொபஷனல் பல்கலைக்கழக குழுவினர், ராக்கெட் மற்றும் விண்வெளி குறித்த சிறந்த முறையில் விளக்கியதற்காக ஸ்டெம் என்கேஜ்மென்ட் விருது வழங்கப்பட்டது.

பல்வேறு நாடுகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட  மாணவர்கள் பங்கேற்றனர்.