லண்டன்: பாகிஸ்தான் அணியுடன் மோத இருந்த இங்கிலாந்து அணி வீரர்கள் 3 பேர் உள்பட 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், இங்கிலாந்து அணியின் வெற்றி கேள்விக்குறியாகி உள்ளது.

8ந்தேதி அன்று இங்கிலாந்தில் உள்ள கார்டிஃப் மைதானத்தில்  இங்கிலாந்து பாகிஸ்தான் இடையே முதல் ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. இந்த நிலையில், இங்கிலாந்து வீரர்கள் 3 மற்றும் அவர்களுடன் உள்ள பணியாளர்கள் 4 பேர் உள்பட 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக போட்டியில்  இங்கிலந்து அணிக்கு கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இங்கிலாந்தில் டெல்டா வைரஸ்தாக்கம் தொடர்ந்து வருகிறது. இதனால் ஊரடங்கும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் கிரிகெட் போட்டிகளும் அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. அதையடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் 8ம் தேதி தொடங்க உள்ளது.  முன்னதாக, அனைத்து வீரர்கள் மற்றும் அவர்களுடன் உள்ள பணியாளர்கள் என அனைவருக்கும்  ஆர்.டி.பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், இங்கிலாந்து அணி வீரர்கள் 3 பேர் மற்றும் பணியாளர்கள் 4 பேர் உள்பட மொத்த  7 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது,  இதையடுத்து, ஒட்டுமொத்த இங்கிலாந்து அணியும் தனிமைப்படுத்தப்பட்டன.  வீரர்கள் பெயரை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட மறுத்துவிட்டது.

பாகிஸ்தானுக்கு எதிராக 8ந்தேதி (வியாழன்)  ஒரு நாள் தொடர் தொடங்கவிருப்பதால் தற்காலிகமாக இங்கிலாந்து அணிக்கு  கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்படலாம் என தெரிகிறது.

இந்த சூழல் காரணமாக  முற்றிலும் வேறு அணியை தேர்வு செய்யும் நிலைக்கு இங்கிலாந்து வாரியம் தள்ளப்பட்டுள்ளது, இது இன்று இரவு அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. இதனையடுத்து ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் மீண்டும் ஒருநாள் அணியில் தேர்வு செய்யப்படலாம் என்று தெரிகிறது. இதனால் பாகிஸ்தானை எதிர்கொள்வதில் இங்கிலாந்து வீரர்கள் தடுமாற்றம் அடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.