கோவை ஆட்சியரை கண்டித்த அதிமுக எம்எல்ஏ-க்களின் செயலுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கண்டனம்

Must read

கோவை:
கோவை ஆட்சியரை கண்டித்த அதிமுக எம்எல்ஏ-க்களின் செயலுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் தடுப்பூசி முகாம்களை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 8 அதிமுக எம்எல்ஏ-க்கள் நேற்று முன்தினம் மாலை கோவை மாவட்ட ஆட்சியர்ஜி.எஸ்.சமீரனிடம் மனு அளித்தனர்.

எம்எல்ஏ-க்கள் அளித்த மனுக்களை ஆட்சியர் இருக்கையில் அமர்ந்தபடி வாங்கியதற்கு அதிமுகஎம்எல்ஏ-க்கள் கண்டனம் தெரிவித்து சத்தம் போட்டுள்ளனர். இதையடுத்து ஆட்சியர் சமீரன் எழுந்து நின்று மனுவைப் பெற்றுக் கொண்டுள்ளார். ஆட்சியரை கண்டித்த அதிமுக எம்எல்ஏ-க்களின் செயலுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு வருவாய்த் துறைஅலுவலர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், எஸ்.பி.வேலுமணிதலைமையில் வந்த அதிமுக எம்எல்ஏ-க்கள் ஆட்சியர் சமீரனிடம் மிரட்டும் தொனியில் நடந்து கொண்டதற்கு கோவை மாவட்ட வருவாய்த் துறையின் சார்பில் கண்டனம் தெரிவிக்கிறோம். அரசு பணியாளர்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாகாமல் பணியாற்ற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

More articles

Latest article