சென்னை: முதல் தவணை தடுப்பூசி செலுத்திய பலர், 2வது தவணை செலுத்திக் கொள்ளவில்லை, அவர்கள் உடனே 2வது தவணை தடுப்பூசியை எடுத்துக்கொள்ள வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.

இந்தியாவில் 100 கோடி டோஸ் தடுப்பூசி 9 மாதங்களில் பொதுமக்களுக்கு போடப்பட்டு சாதனை படைத்துள்ளது. ஆனால், 2 டோஸ் தடுப்பூசிகைள எடுத்துக்கொண்டவர்கள்  21 சதவீதம் பேர் மட்டுமே. 51 சதவீத மக்கள் மட்டுமே முதல் தவணை தடுப்பூசி போட்டு உள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 5.4 கோடி கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  இன்று செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியதழடன், முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திய பலர், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை அவர்கள் உடனே தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் இதுவரை  5கோடியே4லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது/ மூன்றாவது அலையின் பாதிப்பு எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம் என்கிற நிலையில், பண்டிகை காலங்களில் பொதுமக்கள் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பொது இடங்களில் செயல்பட வேண்டும்.

தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும் பொதுமக்கள்  கொரோனா தடுப்பு வழிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும்  என்று கூறினார்.