திருப்பதி,
திருமலையில் உள்ள ஏழுமலையான தரிசிக்க வருபவர்கள் ஆதார் அட்டையுடன் வாருங்கள் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அறைகள் பெற ஆதார் அட்டை கட்டாயம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆதார் இல்லையென்றால் அரசால் அங்கீகரிக்கப்பட்ட புகைப்படத்துடன் அடையாள அட்டை அவசியம் என கோயில் நிர்வாகம் வலியுறுத்தி உள்ளது.
thirupathi
இதுகுறித்து தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருமலைக்கு வரும் பக்தர்களை இடைத்தரகர் தொல்லையில் இருந்து விடுவிக்கவும், வாடகை அறை பெறு வதற்கும், இணையதளத்தில் தரிசன சீட்டுகள் பெறவும் ஆதார் அட்டையை கட்டாயமாக்கி இருப்பதாக தெரிவித்து உள்ளது.
தர்ம தரிசனம், நடைபாதை பக்தர்கள் தரிசனம் தவிர்த்து பிற அனைத்து தரிசனங்களுக்கும், வாடகை அறை பெறவும் ஆதார் அட்டை கட்டாயம் தேவை.
எனவே திருமலைக்கு வரும் பக்தர்கள் அனைவரும் தங்கள் ஆதார் அட்டையைக் கொண்டு வர வேண்டும்.
ஆதார் அட்டை இல்லாதவர்கள் தங்களுடன் வரும் மற்றவர்களின் ஆதார் அட்டை மூலம் வாடகை அறை, தரிசன சீட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.