கொல்கத்தா:

மற்றவர்களை அடிப்பவர்கள் உண்மையான இந்துக்களாக இருக்க முடியாது என மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்தார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

மக்களின் நலனுக்காகவே அனைத்தையும் செய்துகொண்டிருக்கிறேன். ஆனால் ஒருபோதும் கலவரத்தை அனுமதித்ததில்லை. பிரிவினை அரசியலையோ, வெறுப்பு அரசியலையோ ஒருபோதும் ஆதரித்ததில்லை.

இந்துத்வாவை நான் நம்புகின்றேன். பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கையின் படி உள்ள இந்துத்வாவை ஆதரிக்க மாட்டேன். அடித்தவர்களை அடிப்பவர்கள் உண்மையான இந்துக்களாக இருக்க முடியாது.

நானும் இந்து குடும்பம்தான். ஒருபோதும் ரவுடிகளை ஆதரித்ததில்லை. தினமும் துளசி இலை முன்பு விளக்கு ஏற்றுகிறோம். அடுத்தவரை வெறுக்க வேண்டும் என என் பெற்றோர் சொல்லிக் கொடுத்தது இல்லை. வேற்றுமையை எங்களுக்கு யாரும் கற்றுத் தரவில்லை.

மேற்கு வங்கத்தில் எந்த மதத்துக்கு எதிராகவும் நாங்கள் வேற்றுமையை காட்டியதில்லை. ராமகிருஷ்ண மடத்திலிருந்தும், பாரத் சேவாஷ்ரம சங்கத்திடமிருந்தும் பாஜகவும், ஆர்எஸ்எஸ்&ம் இந்துத்வாவை கற்றுக்கொள்ள வேண்டும்.

நாங்கள் ராமகிருஷ்ண பரசஹம்சர் மற்றும் விவேகானந்தரால் கவரப்பட்டவர்கள். இந்த சமுதாயத்துக்கு பணியாற்றுகிறோம் என நம்புகின்றோம்.

குரு ரக்ஷா என்ற பெயரில் கலவரத்தை ஏற்படுத்த பாஜக முயற்சிக்கிறது. வதந்திகளை பரப்பி விடுகின்றனர். 40 வீரர்கள் உயிர்த்தியாகம் செய்ததையும் அரசியலாக்குகிறார்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.