சென்னை: உயிருக்கும் தோல்விக்கும் பயந்தவர்கள் போருக்கு வரக்கூடாது என நடிகர் ரஜினியை கடுமையாக விமர்சித்து நடிகை கஸ்தூரி டிவிட் பதிவிட்டுள்ளார்.

பல ஆண்டுகளாக கட்சியைத் தொடங்கப்போகிறேன் என்று கூறி வந்த ரஜினி,  புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை டிச.31-ந் தேதி வெளியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது திடீரென,  உடல்நிலையை காரணம் காட்சி, தான் கட்சி தொடங்கவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு மே மாதம் 15ந்தேதி, ரஜினி தனது ரசிகர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசும்போது, எதிர்ப்பு இல்லாமல் அரசியலில் யாரும் வளர முடியாது என்றும் 23 ஆண்டு மட்டுமே தான் கர்நாடகாவில் வாழ்ந்தேன்,  மீதியுள்ள 44 ஆண்டுகள் தமிழகத்தில வாழ்ந்து வரும் தான் ஒரு “பச்சை தமிழன்” என்று அறிவித்தவர், அரசியலுக்கு மூலதனமே எதிர்ப்புதான் என்றும், போருக்கு தயாராகுங்கள், போர் வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஆனால், தற்போது தடாலடியாக அரசியலுக்கு வரப்போவதில்லை என பல்டியடித்துள்ளார்.

இந்த நிலையில், நடிகையும், சமூக ஆர்வலருமான கஸ்தூரி ரஜினியின் அறிவிப்பை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

கோடி பண நஷ்டத்தை விட கோடி மனக்கஷ்டம் பெரிது. உயிருக்கும் தோல்விக்கும் பயந்தவர்கள் போருக்கு வரக்கூடாது.

ரஜினி அவர்களின் முடிவுக்கு பாராட்டுக்கள். நீங்கள் பூரண நலத்துடன் நிம்மதியாக நீடூழி வாழவேண்டும்.

எதிர்பார்க்கப்பட்டது, கணிக்கப்பட்டுள்ளது, இன்னும் ஏமாற்றம். திரு ரஜினிகாந்த் நீண்ட மன அழுத்தமில்லாத வாழ்க்கையை விரும்புகிறேன் என விமர்சித்துள்ளார்.