நெட்டிசன்:
பல்லடம் ராசு (Rasu Rasu) அவர்களின் முகநூல் பதிவு:
ரு ரயில் . அதில் சப்ளையராக இருக்கும் தனுஷ் . பயணம் செய்யும் ஒரு நடிகை நடிகையின் அம்மா மற்றும் நடிகையின் டச்சப் பெண் கீர்த்தி சுரேஷ் . மற்றொரு பயணி மத்திய அமைச்சர் ராதாரவி அவரது செக்யூரிட்டி . முதல் பாதி முழுவதும் இவர்கள் ஒருவருக்கொருவர் கிச்சுக்கிச்சு மூட்டிக் கொண்டு நம்மை பயங்கரமாக சிரிக்க வைக்கிறார்கள் .
தனுஷ் , ராதாரவியின் செக்யூரிட்டி ,கீர்த்தி சுரேஷ் , ராதாரவி இவர்களுக்குள் நடக்கும் மோதல்கள் பசங்க படத்தில் அந்தச் சிறுவர்களை வைத்து பண்டிராஜ் ஏற்கெனவே காட்டிவிட்டார்தான் . ரயிலில் வைத்துக் காட்டியிருப்பது தமிழுக்கு புது முயற்சி.
ntlrg_160428172531000000
” வெளிய எந்திரிச்சுப் போற பச்ச சட்டைக்காரன் ரத்தம் கக்கி சாவான் ” என்ற அசரீரியையும் மீறி சன்னமாக நழுவி விடலாமென்று உலக சினிமா ரசிகன் தயாராகும் போது ரயில் கோலிவுட்டிலிருந்து ஹாலிவுட்டுக்குள் புகுந்து விடுகிறது .
INTERVEL
ரயில் ஒரு மாட்டின் மீது மோதிவிட ட்ரைவர் அதிர்ச்சியில் மண்டையைப் போட்டுவிடுகிறார் . கட்டுப்பாட்டை இழந்து ஓட ஆரம்பித்து விடுகிறது . டைரக்டருக்கு அதற்குப் பிறகுதான் முழுமையாக அருள் வந்திருக்க வேண்டும் .
தறிகெட்டு ஓடும் ரயிலில் தாறுமாறான காமெடிக் காட்சிகளை வைத்து அசத்தியிருக்கிறார் . அதுவும் தீப்பிடித்த பெட்டியின் மேல் தனுஷை நிற்க வைத்து காதல் தாபத்தில் இரண்டு கைகளையு விரித்து பாட வைத்த தில் இனி தெலுங்குப் படவுலகில் கூட யாருக்கும் வராது . பரலோகம் போய்க்கொண்டிருக்கும் ரயிலில் கண்ணுங்கருத்துமாக உணவு சமைப்பவர்கள் எட்டாவது அதிசயம் . என்னா அடி ….
ரயில நிறுத்தி தனுஷ் அவங்கள காப்பாத்துறக்கு முன்னாடி படத்த நிறுத்தி எங்கள காப்பாத்திருக்கலாமே ஆபரேட்டர் .