இந்த ஆண்டு ரெயில் விபத்து குறைவாம்! ரெயில்வே துறை சொல்கிறது

Must read

டில்லி,

ந்த ஆண்டு நாட்டில் ரெயில் விபத்து குறைந்துள்ளதாக இந்திய ரெயில்வே துறை தெரிவித்து உள்ளது.

கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ரெயில் விபத்துக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதா தெரிவித்துள்ளது.

இந்த வடமாநிலங்களில் நடைபெற்ற அடுத்த ரெயில் விபத்து காணமாக ஏராளமானோர் உயிரிழந்தனர். இதன் காரணமாக அப்போதைய ரெயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் 2016ம் ஆண்டைவிட 2017ம் ஆண்டு  ரெயில் விபத்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரெயில்வே துறை  புள்ளிவிவரங்களுடன் தெரிவித்து உள்ளது.

அதன்படி  கடந்த 2016  ஆண்டின் முதல் எட்டு மாதத்தில் 78 ரெயில் விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன என்று கூறி உள்ளது. ஆனால், இந்த ஆண்டு (2017)  முதல் எட்டு மாதங்களில் 37 ரெயில் விபத்துக்கள் மட்டுமே நடந்துள்ளன என கூறி உள்ளது.

மேலும், இந்த ஆண்டு  ஏப்ரல் 1-ம் தேதி முதல் நவம்பர் 30-ம் தேதி வரை 49  விபத்துக்கள் நடந்துள்ளன என்றும், ஆனால், கடந்த  2016-2017ம் ஆண்டில் 104 விபத்துகளும், 2015-2016ம் ஆண்டில் 107 விபத்துகளும் நடந்துள்ளன என்றும்,  இந்த விபத்து காரணமாக கடந்த 238 பேர் பலியானதாகவும், ஆண்டு இந்த ஆண்டு வெறும்  மொத்தம் 48 பேர் பலியாகி உள்ளனர்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More articles

Latest article