பரிமலை

ந்த வருட சபரிமலை மகரவிளக்கு சீசன் 21 ஆம் தேதியுடன்  நிறைவு பெறுகிறது.

கடந்த நவம்பர் மாதம் 16 ஆம் தேதி மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது.   பின்பு 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகள், வழிபாடுகளுக்குப் பிறகு டிசம்பர் 27 ஆம் தேதி மண்டல பூஜை நடைபெற்று அன்று கோவில் நடை அடைக்கப்பட்டது.

டிசம்பர் 30 ஆம் தேதி மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டு தொடர்ச்சியாக சிறப்பு பூஜைகள், வழிபாடுக நடைபெற்றன.  கடந்த 15-ஆம் தேதி நடைபெற்ற மகரவிளக்கு பூஜை மற்றும் அதை தொடர்ந்து பொன்னம்பல மேட்டில் தோன்றிய ஜோதியையு சன்னிதானம் உள்ளிட்ட பகுதிகளில் குவிந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டனர்.

இந்த மண்டல, மகரவிளக்கு சீசன் நிறைவாக இன்றுகாலை 9 மணி வரை மட்டுமே நெய்யபிஷேகம் நடைபெற உள்ளது.  இன்று இரவு அத்தாள பூஜைக்கு பின் மாளிகப்புரம் மணிமண்டபத்தில் இருந்து அய்யப்ப சாமி ஊர்வலம் சரம்குத்தி வரை சென்று மீண்டும் சன்னிதானம் வந்து சேரும்.

, நாளை இரவு 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். பிறகு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்பட்ட பின் மாளிகப்புரம் கோவிலில் குருதி சடங்குகள் நடைபெறும்.

வரும் 21-ஆம் தேதி காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படும். தொடர்ந்து நடைபெறும் சிறப்புப் பூஜைகளுக்குப் பிறகு திருவாபரண ஊர்வலம் மீண்டும் பந்தளத்துக்கு புறப்படும். காலை 6 மணிக்கு நடை அடைக்கப்படும். அத்துடன் 2023-2024 மண்டல, மகரவிளக்கு சீசன் நிறைவு பெறுகிறது.