மேஷம்

ஆபீஸ்ல உங்க பணிகளில் மட்டுமே கவனமா இருங்க. உயர் அதிகாரிங்க கிட்ட பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிங்க. ப்ளீஸ். எதிர்பார்த்த சலுகைகள் சற்று இழுபறிக்குப் பிறகே கிடைக்கும். வழக்குகளில் இருந்து வந்த பிற்போக்கான நிலை மாறி, சாதகமான ரிசல்ட் கிடைக்கும். பிள்ளைங்களால பெருமை உண்டு. வாழ்க்கைத்துணை மூலம் சின்ன அளவுல பணம் வர்றதுக்கு வாய்ப்பு இருக்கு. எதை எடுத்தாலும் கொஞ்சம் நிதானப்போக்குதான் இருக்கும். ஆனாலும் பொறுமையும் முயற்சியும் ஒங்களுக்கு இருந்தாலே போதும். முனைஞ்சு முடிச்சுடுவீங்க. கணவன் – மனைவிக்கிடையே சின்னச் சின்ன சண்டை வந்து அப்புறம் ரொம்பவே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிரதர்ஸ் சிஸ்டர்க்கு நல்ல விஷயங்கள் சந்தோஷமா நடக்கும். அதைப் பார்த்து நீங்களும் சந்தோஷப்படுவீங்க. வியாபாரத்துல கடுமையா உழைச்சால் மட்டுமே விற்பனையை அதிகரிக்க முடியும்.

ரிஷபம்

கடன்கள் பத்தின விஷயங்கள்ல கொஞ்சம் கேர்ஃபுல்லா இருப்பது நல்லது. இளைய சகோதரர்களால் ஹெல்ப் உண்டு. அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியம் சற்று இழுபறியாகி முடியும். பட் நல்லபடியா நீங்க நெனைச்ச மாதிரியே முடியும். ஆபீஸ்ல பணிச்சுமை அதிகரிக்கும். ஆனா அநாயாசமா சமாளிச்சுடுவீங்க. யார் கிட்டயும் எந்த பிராமிஸும் செய்யாதீங்க. மகிழ்ச்சி தரும் வாரமா அமையுங்க. வாரத்தோட ஆரம்பத்துல இழுபறியாக இருந்த அரசாங்கக் விஷயம், வாரக் கடைசில நல்லபடியா முடிஞ்சு நிம்மதிப் பெருமூச்சு வரும். எடுத்த முயற்சிங்க நிறைய முயற்சிகள் மற்றும் அலைச்சல்களுக்குப் பிறகு அனுகூலமாக முடியும். இளம் பெண்களுக்கும் ஆண்களுக்கும் திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். மம்மிக்கும் மம்மி மூலமாயும் நல்ல செய்தி உண்டு. இத்தனை காலமா இருந்துக்கிட்டிருந்த வயிறு சம்பந்தமான பிரச்னைங்க தீரும்.

மிதுனம்

மனி மேட்டர்ஸ் எல்லாம் நல்லபடியே காணப்படுதுங்க. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும், டிரஸ்களும் நகைங்களும் சேர  வாய்ப்பு இருக்குங்க. ரிலேடிவிஸ்ஸூடன் வீண் மனவருத்தம் வராதபடிக்கு சூப்பரா மேனேஜ் செய்வீங்க. குடும்பம் தொடர்பான எந்த ஒரு முடிவையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. வாரத் தொடக்கத்தில் செலவுகளில் திட்டமிடல் ரொம்பவும் அவசியம். ஆபீசில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனமா இருந்து ஜமாய்ப்பீங்க. இப்போதைக்கு சலுகைகள் எதையும் எதிர்பார்க்காம உங்க டியூட்டியை மட்டும் கரெக்டா செய்துகிட்டு வாங்க. லக்-கை நம்பறதையும்விட உழைப்பை  நம்பறது பெட்டர்.  சிலருக்கு இட மாறுதல் கிடைப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. சக ஊழியர்களிடம் இணக்கமாக நடந்துக்குங்க. பிசினஸில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்காது. பிசினஸ் அபிவிருத்தி அடைய கூடுதலான முயற்சியும் உழைப்பும் எடுப்பீங்க. பார்ட்னருங்க கிட்ட போதுமான ஒத்துழைப்பை எதிர்பார்க்கலாங்க.

கடகம்

அக்கம்பக்கத்தினர்கூட இணக்கமா நடந்துக்குவீங்க. பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைப்பது இழுபறியாகும். ஆனா சீக்கிரத்துல கிடைக்கப்போகுதுங்க. லேடீஸ்க்கு… அவங்க எந்த வயசுல இருந்தாலும் அவங்க தகுதிக்கு மீறின பொறுப்புகள் அதிகரிக்கும். இட்ஸ் ஓகே. அதையெல்லாம் நீங்க சலிப்படையாம செய்வீங்க.. கணவர் மற்றும் பிள்ளைங்களோட விருப்பங்களை நிறைவு செய்து அவங்களை ஹாப்பியாக்கி நீங்களுமே மகிழ்வீங்க. ரொம்பநாள்களா எதிர்பார்த்துக் காத்திருந்த பதவிஉயர்வு கிடைக்கும். அதனால மனசுல உற்சாகம் அதிகரிக்கும். உங்க கூட வேலை பார்க்கறவங்க அனுசரணையா இருப்பாங்க. பணவரவுக்கு குறைவிருக்காது. குடும்பச் சூழ்நிலை மனசுக்கு ரொம்பவே மகிழ்ச்சி தர்றதா இருக்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சகோதர வகையில் செலவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சி தரும் செலவாகவே இருக்கும். அவங்க ஒங்களைப் புரிஞ்சுக்கவும் செய்வாங்க என்பதால் செலவு நல்லதுக்குதானே?

சிம்மம்

ஆபீசில் உங்களுக்கு மறுக்கப்பட்டு வந்த சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்ற சலுகைகள் நல்லபடியாக் கெடைக்கும். சிலருக்கு வேறு ஊருக்கு இட மாறுதல் கிடைக்கும். அதிகாரிகள் அனுசரணையாக இருப்பாங்க. விலகிப் போயிக்கிட்டிருந்த ரிலேடிவ்ஸ் உங்களைப் புரிஞ்சுக்கிட்டு உறவு பாராட்டி உங்களை நோக்கி  நெருங்கி வர்றது ஆறுதலா இருக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது. வழக்குகளில் பொறுமையா இருக்கணுங்க. தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் சான்ஸ் இருக்கு. குழந்தைங்க வாழ்க்கைல நன்மை ஏற்படுத்தக்கூடிய திருப்பம் ஒண்ணு உண்டாகும். கணவருக்கு/ ஒய்ஃபுக்கு ஒரு சந்தோஷ நியூஸ் உண்டு.  சிலருக்கு  அவங்க விரும்பிய இடத்துக்கு மாற்றல் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கொடுப்பாங்க. அவங்களுக்கு நீங்க தர்ற அட்வைஸ் ரொம்பவே பயனுள்ளதா இருக்கும்.

கன்னி

குடும்பத் தலைவியாய்த் திகழும் லேடீஸுக்குக் குடும்ப நிர்வாகத்தில் இருந்துக்கிட்டிருந்த சிரமங்கள் தீரும். அது மட்டுமில்லைங்க, உங்கள் சிரமம் அறிந்து கணவர் காட்டும் அன்பும் ஆதரவும் உங்களை உற்சாகமாயும் ஹாப்பியாவும் செயல்படச் செய்யும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். திடீர்னு ஒரு நல்ல அமவுன்ட் வந்து உங்களை ஹாப்பியா ஆக்கிடும். பணம் கொடுக்கல் வாங்கல் மேட்டர்ஸிலும் ஷ்யூரிட்டி கையெழுத்துப் போடும்போதும் ரொம்பவே கேர்ஃபுல்லா யோசிச்சு முடிவு செய்ங்க. எதிர்பார்த்த குட் நியூஸ் இந்த வாரம் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காகக் கொஞ்சம் அலைச்சலும் அதனால் சோர்வும் உண்டாகும்.  ஆனாலும்கூட மனசுக்குள் உற்சாக மழையும் ஆனந்த ஊற்றும் இருக்கும். இளைய பிரதர்ஸ் மற்றும் சிஸ்டர்ஸ் வகையில் குட்டியூண்டு சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.

சந்திராஷ்டமம் : ஜனவரி 18 முதல் ஜனவரி 20 வரை

சந்திராஷடம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்.

துலாம்

குடும்பத்துல மூன்றாவது நபர்களின் தலையீடு காரணமாக குழப்பங்கள் வராமல் நீங்களே கிளெவரா மேனேஜ் செய்துடுவீங்க. ஆபீஸ்ல உங்களோட ஆற்றலும் புத்திசாலித்தனமும் வெளிப்படும். உயர்ந்த பதவி ஒங்களைத் தேடிக்கிட்டு வரும். சம்பள உயர்வும் கிடைக்க கொஞ்சம் சான்ஸ் இருக்குங்க. உங்க கூட ஒர்க் பண்றவங்ககிட்ட கொஞ்சம் கேர்ஃபுல்லா இருங்க. குறிப்பா உங்க சீக்ரட்ஸ் அல்லது அலுவலகத்தோட சீக்ரட்ஸை அவங்க கிட்ட சொல்லவே வேண்டவே வேணாம். வேறு வேலைக்கு முயற்சி செய்ய நினைக்கும்போதே நீங்க ஆல்ரெடி உள்ள வேலையில் சூப்பர் திருப்தி ஏற்படும்படியான நல்ல விஷயங்கள் நடந்துடுங்க. பிசினஸ்ல விற்பனையும் லாபமும் இன்கிரீஸ் ஆகும். பற்று வரவு சுமுகமாக நடை பெறும். கஸ்டமர்ஸின் எண்ணிக்கை அதிகரிக்கும். உங்க கீழ வேலை பாக்கறவங்க விற்பனையை அதிகரிப்பதில் ஆர்வம் காட்டுவார்கள்.

சந்திராஷ்டமம் : ஜனவரி 20 முதல் ஜனவரி 22 வரை

சந்திராஷடம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்.

விருச்சிகம்

போதிய பணம் கிடைப்பதால் மனசுல திருப்தியும் நிறைவும் நிம்மதியும் உண்டாகும். சில ஃப்ரெண்ஸோட பாராமுகமான மனப்பான்மை மாறி, அனுசரணையாக நடந்துக்குவாங்க. இது உங்களை உற்சாகப்படுத்தும். எதிர்பார்த்ததைவிட ஜாஸ்தியாய்ப் பணவரவு இருக்கும் என்பது ஒரு பக்கம் இருக்கட்டுங்க… மனசுல நிம்மதியும் நிறைவும் வருமே அதுக்கு ஈடு ஏது? மற்றவர்களுக்குக் கொடுத்து வராது என்று நினைத்த கடன் தொகை வந்து சேரும். சிலருக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் பெறும் வாய்ப்பு ஏற்படும். திருமண முயற்சிகள் சற்று இழுபறிக்குப் பிறகு சாதகமாய் முடியும். சகோதர வகையில் ஏற்பட்ட சின்ன டென்ஷன்ஸ் நீங்கும்.  அவங்க மூலம் ஆதாயமும் கிடைக்கும். அக்கம்பக்கத்துல உள்ளவங்ககூட அனுசரிச்சுக்கிட்டுப் போறது நல்லது.

சந்திராஷ்டமம் : ஜனவரி 22 முதல் ஜனவரி 24 வரை

சந்திராஷடம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்.

தனுசு

ஆபீசுல எதிர்பார்த்துக்கிட்டிருந்த பதவி உயர்வும் சம்பள உயர்வும் சின்னத் தாமதத்துக்குப் பிறகுதான் கெடைக்கும். சிலருக்குப் புதுப் பொறுப்பு ஒண்ணு வந்து சேரும். முதல்ல முகம் சுளிக்கத்தான் செய்வீங்க. பிறகு உற்சாகமாய் ஏத்துக்குவீங்க. வேலை பர்மனென்ட் ஆகும். அதிகாரிங்களோட ஹெல்ப்பும் சப்போர்ட்டும் கெடைப்பதால உற்சாகமாய் வேலையில் ஈடுபடுவீங்க. பிசினஸ் செய்யறவங்க விற்பனையை அதிகரிக்கக் கொஞ்சம் அதிகமா உழைக்கவேண்டி இருக்கும். உழைப்புக்கேற்ற லாபம் கிடைப்பதால் ஹாப்பி ஆயிடுவீங்க. சக வியாபாரிகள் மூலமா இருந்துக்கிட்டிருந்த போட்டிங்க முடிவுக்கு வரும். நல்ல ஃப்ரெண்ட்ஸைத் தக்க வைக்க எடுக்கும் முயற்சிங்க நல்லபடியா முடியும். குடும்பத்தை நிர்வகிக்கும் லேடீஸ்க்கு மனசுக்கு உற்சாகம் தரும் இன்ஸிடென்ட்ஸ் நடைபெறும். சிலருக்குப் பிள்ளைங்களால ஆதாயம் கெடைக்கும். ஹஸ்பெண்ட் ஒய்ஃப் ஒருத்தருக்கொருத்தர் வாக்குவாதம் செய்யாம அனுசரணையா நடந்துக்கிட்டா இது ஹாப்பி வீக்.

சந்திராஷ்டமம் : ஜனவரி 24 முதல் ஜனவரி 27 வரை

சந்திராஷடம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்.

மகரம்

உடல் ஆரோக்கியத்துல கவனம் அதிகரிக்கும். எனவே ரொம்பவும் ஹெல்த்தியா உணருவீங்க. தேவையான அளவுக்கு பணவரவு இருக்கும். எனவே  சேமிப்பு சாத்தியமாகும். செலவுங்க கொஞ்சம் இருந்தாலும் அது கையைக் கடிக்காது. கணவன் – மனைவிக்கிடையே ஹாப்பியான ஒற்றுமை அதிகரிக்கும். உங்களைப் பற்றி விமர்சனம் செய்தவங்க, அவதூறாப் பேசினவங்க இப்போது வாயை மூடிக்கிட்டு உங்களை பிரமிப்பாப் பார்ப்பாங்க.  பொறுமையைக் கடைப்பிடிச்சு வின் பண்ணிடுவீங்க. தந்தையுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் மறைந்து சுமுகமான உறவு ஏற்படும். அவர் மூலம் பணம் வர்றதுக்கும் வாய்ப்பு உண்டு. ஆபீஸ்ல வேலைச்சுமை அதிகரிக்கும்னாலும் அதை விரும்பி சந்தோஷமாய்ச் செய்து பாராட்டும் வாங்கிடுவீங்க. கொடுத்து வைச்ச பணம் எல்லாம் திரும்ப வரும். உறவுகள் பாராட்டும்படி நடந்துக்குவீங்க.

கும்பம்

கொஞ்சம் பொறுமையைக் கடைப்பிடிங்க. போதும். நிறையப் பிராப்ளம்ஸ்லேயிருந்து தப்பிக்கலாம். பிறந்தவீட்டு ரிலேடிவ்ஸ் மூலமா, பல நாளா எதிர்பார்த்துக்கிட்டிருந்த காரியம் ஹாப்பியா முடியும். உறவினர் நண்பர்களோட பாராட்டுகளைப் பெறுவீங்க. எதிலும் சிந்தித்து செயல்பட்டாலே போதும். எந்தப் பிரச்னையும் வராம பாதுகாத்துக்கலாம். தேவையேயில்லாத கற்பனை பயங்கள் காரணமா  டென்ஷன் ஏற்படுத்திக்காதீங்க. ஆரோக்கியத்துல கவனம் செலுத்துவீங்க. ஸோ.. நோ பிராப்ளம். போன வருஷம் இருந்த எந்த பிரச்னையும் இப்போ இருக்காது. கணவர் மனைவி கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துக்கணும். பால்ய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியும் ஆறுதலும் தருவதாக இருக்கும். அக்கம்பக்கத்து வீட்டுக்காரங்களால சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் மூலம் எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. உங்க மேலதிகாரிங்க உங்க முயற்சிக்கு ஆதரவாக இருப்பாங்க.

மீனம்

வியாபாரத்துல விற்பனையும் லாபமும் நல்லாவே இருக்கும். பற்று வரவில் பிரச்னை எதுவும் இருக்காது. சரக்கு கொள்முதலுக்காக தொலைதூர பயணங்கள் செல்ல நேரிடும்.  ஆனாலும் இந்த நன்மைங்களுக்காக நீங்க நிறைய உழைச்சு முயற்சிங்களை அதிகரிப்பீங்க. இட்ஸ் ஓ கே. ரிசல்ட் நல்லா இருந்தா சரி. குடும்பச் செலவுங்களால கொஞ்சம் சிரமப்பட வேண்டி இருக்கும். ஆனாலும், கடன் வாங்காமல் சமாளிச்சுடுவீங்க. நீங்க நெனைச்ச எல்லா விஷயங்களையும் நல்லபடியா முடிச்சு நிமிர்ந்து உங்களுக்கு நீங்களே கிளாப் செய்துக்க முடியும் என்பது ஆறுதலான விஷயம். பிள்ளைங்களால ஹாப்பியாவும் பெருமிதமாவும் ஆயிடுவீங்க. பணவரவு ஓரளவுக்கு இருக்கும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும. ஆனாலும் ஈஸியா சமாளிச்சு நிம்மதியாவீங்க. கணவன் – மனைவிக்கி டையே ஏற்பட்டிருந்த பிராப்ளம்ஸ் மறைஞ்சு சந்தோஷம் உண்டாகும்.