திருவனந்தபுரம்: மகாராஷ்டிராவில் இருந்து கேரளாவில் உள்ள விண்வெளி மையத்துக்கு தேவையான முக்கிய எந்திரத்தை ஏற்றிய மெகா லாரி ஓராண்டு கழித்து திருவனந்தபுரம் வந்து சேர்ந்துள்ளது.
கேரளாவில் திருவனந்தபுரத்தில் உள்ளது விக்ரம்சாரா பாய் விண்வெளி மையம். இந்த மையத்துக்கு ஏரோஸ்பேஸ் ஆட்டோக்ளேவ் என்ற எந்திரம் மகாராஷ்டிராவில் தயாரிக்கப்பட்டது. இந்த எந்திரத்துடன்  74 சக்கரங்கள் பொருத்திய மெகா சைஸ் லாரி மகாராஷ்டிராவில் இருந்து புறப்பட்டது.
ஏழரை மீட்டம் நீளம், ஆறரை மீட்டர் அகலத்துடன் 70 டன் எடைகொண்டது அந்த இயந்திரம். கடந்தாண்டு ஜூலை மாதம் நாசிக்கில் இருந்த இயந்திரத்துடன் லாரி புறப்பட்டது. கிட்டத்தட்ட ஓராண்டு கழித்து தற்போது திருவனந்தபுரம் வந்து சேர்ந்தது.
இத்தனை நாட்கள் கழித்து இந்த 74 சக்கரங்கள் பொருத்திய லாரி வந்ததற்கான காரணங்களும் இருக்கின்றன. வழக்கமாக, லாரிகள் மகாராஷ்டிராவிலிருந்து கேரளா செல்ல ஒரு வாரம் ஆகும். இருப்பினும், இந்த லாரியின் அளவு இருப்பதால், ஒரு நாளைக்கு சராசரியாக ஐந்து கிலோமீட்டர் மட்டுமே செல்ல முடியும்.
வோல்வோ எஃப்எம் மாடல் என்ற இந்த லாரி மிக பெரியது. அந்த லாரி நகரும் போது முழு சாலையையும் ஆக்கிரமிக்கிறது. மற்ற வாகனங்கள் செல்ல இடமில்லை. சாலை மார்க்கமாக லாரி பயணிக்கும் போது எந்த இடையூறு ஏற்பட கூடாது என்பதற்காக, போலீசார் ஒரு பைலட் காரை வழங்கப்பட்டது.
வழியில் இடையூறாக இருந்த மரக்கிளைகள் அகற்றப்பட்டு வழி ஏற்படுத்தப்பட்டது. கொரோனா லாக்டவுன் காரணத்தால் ஆந்திராவில் ஒரு மாதம் இந்த லாரி சிக்கியது, குறிப்பிடத்தக்கது.