திருவண்ணாமலை:
சித்ரா பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலை நகருக்குள் வாகனங்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.


புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் சித்ரா பவுர்ணமி கிரிவலத்திற்கு கடந்த 2 ஆண்டுகளாக, கொரோனா காரணமாக தடைவிக்கப்பட்டது. தற்போது கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் முற்றிலும் குறைந்துவிட்டதால், கொரோனா விதிமுறைகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் வழக்கமான பூஜைகளும் திருவிழாக்களும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் நலன் கருதி கட்டணமில்லா பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து கிரிவல பாதைக்கு வருதற்காக மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் மற்றும் திருவண்ணாமலை நகர தனியார் பள்ளி நிர்வாகங்கள் சார்பில் கட்டணமில்லா பேருந்துகள் இயக்க முன் வந்துள்ளனர்.

இதற்காக 9 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடுபடும் 4,000 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.