செ‘ன்னை: திருவள்ளுவர் விருது மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில், மூத்த காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு காமராஜர் விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதைத்தொடர்ந்து, “வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்” திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்ருது நிதி உதவி வழங்கினார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு அரசின் 2023ஆம் ஆண்டின் திருவள்ளுவர் விருது மற்றும் 2022 ஆம் ஆண்டுக்கான தமிழ்த்துறை விருதுகளை முதலமைச்சர் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
அதன்படி, 2022ம் ஆண்டுக்கான விருதுகள் 9 பேருக்கு வழங்கப்பட்டது.
பெருந்தலைவர் காமராஜர் விருதை ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு வழங்கப்பட்டது.
தந்தை பெரியார் விருது திராவிட கழக துணை தலைவர் பூங்குன்றனுக்கு வழங்கப்பட்டது.
சட்டமேதை அம்பேத்கர் விருது எஸ்.வி.ராஜதுரைக்கு வழங்கப்பட்டது.
பேரறிஞர் அண்ணா விருது முன்னாள் அமைச்சர் தஞ்சை எஸ்.என்.எம்.உபயதுல்லாவுக்கு வழங்கப்பட்டது.
மகாகவி பாரதியார் விருது முனைவர் ஆ.ரா.வெங்கடாசலபதிக்கு வழங்கப்பட்டது.
பாவேந்தர் பாரதிதாசன் விருது திராவிட இயக்க எழுத்தாளர் வாலாஜா வல்லவனுக்கு வழங்கப்பட்டது.
கி.ஆ.பெ.விசுவநாதம் விருது கவிஞர் மு.மேத்தாவுக்கு வழங்கப்பட்டது,
திரு.வி.க விருது நாமக்கல் பொ. வேல்சாமிக்கும் வழங்கப்பட்டது.
னைவர் மதிவாணனுக்கு தேவநேயப்பாவணர் விருது வழங்கப்பட்டது.
2023 ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருதை இரணியன் நா.கு.பொன்னுசாமிக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, தாமோ அன்பரசன், உதயநிதி ஸ்டாலி மற்றும் மேயர் பிரியா உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.