சென்னை: இமயமலைக்கு சென்றுள்ள ரஜினிகாந்தி, உ.பி. மாநிலத்திற்கு சென்று, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து ஆசி பெற்றார். இது குறித்து விசிக தலைவர் திருமாளவன் விமர்சனம் செய்துள்ளார். திருமாவை,  சமயத்துக்கு ஏற்றவாறு பேசும் அரசியல் பச்சோந்தி என ரஜினி ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இதே திருமாவளவன் ஏற்கனவே ரஜினி கட்சி தொடங்குவதாக அறிவித்தபோது,  தமிழ்நாட்டில், கருணாநிதி, ஜெயலலிதா மறைவு காரணமாக ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தை, ரஜினி  நிரப்புவார் என்றும், கருணாந4தி, ஜெயலலிதா இடத்தை ரஜினி நிரம்புவார் என வாழ்த்தியிருந்த நிலையில், தற்போது ரஜினியின் நடவடிக்கையை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ரஜினி கட்சி ஆரம்பித்து ஆட்சி அமைத்திருந்தால் யோகி ஆட்சி போலவே தமிழ்நாடு ஆகியிருக்கும் என விமர்சித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் வண்ணாரப்பேட்டையில் விடுதலைக் கட்சிகள் சார்பில் தென் தமிழகத்தில் நடைபெறும் தொடர் சாதிய வன்கொடுமைகளை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். ஆர்பாட்டத்தில் பேசும்போருது, நாங்குநேரியில் நடைபெற்ற சம்பவத்தை போன்று இனி மேல் நடக்காமல் இருப்பதற்கு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதிய பிரச்சனைகளை தடுக்க தனி உளவு பிரிவை உருவாக்க வேண்டும். சகோதரத்துவம் வளர்ந்தால் தான் ஜாதி ஒழியும். பள்ளி, கல்லூரிகளில் ஜாதிய பிரச்சனைகளை தூண்டினால் தான் ஹிந்து உணர்வு மேலோங்கும் என்பது பாஜ., வின் எண்ணம்.

இந்தியாவிலிருந்து அப்புறப்படுத்த வேண்டிய முதல் நச்சு சக்தி பா.ஜ.,. அதனை தூக்கி எறிய வேண்டும் என்ற கொள்கையில் தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இயக்கமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளது. அகில இந்திய அளவில் பாஜ., வை வெளியேற்ற வேண்டும்.

யோகி ஆதித்யநாத் காலில் போய் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விழுந்து விட்டு வருகிறார். பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. இந்த சம்பவம் எவ்வளவு பெரிய வேதனையாக உள்ளது. ரஜினிகாந்த் மீது எவ்வளவு பெரிய உயர்ந்த மரியாதையை தமிழக மக்கள் வைத்திருக்கிறார்கள்.

தலைவர்களை சந்திப்பது முதல்வரை சந்திப்பது பிரச்சினை அல்ல. ஆனால் காலடியில் விழுந்து வணங்குவது யோகி ஆதித்யநாத்தை உயர்வாக மதிப்பது என்பது ஒருபுறம் இருக்கட்டும். அது உங்களுக்குள்ள உறவு. அகில இந்திய அளவில் பாஜ., வை வெளியேற்ற வேண்டும் என நாம் போராடிக்கொண்டிருக்ம் வேளையில்,  யோகி ஆதித்யநாத் காலில் போய் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விழுந்து விட்டு வருகிறார்.

பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. இந்த சம்பவம் எவ்வளவு பெரிய வேதனையாக உள்ளது. ரஜினிகாந்த் மீது எவ்வளவு பெரிய உயர்ந்த மரியாதையை தமிழக மக்கள் வைத்திருக்கிறார்கள். தலைவர்களை சந்திப்பது முதல்வரை சந்திப்பது பிரச்சினை அல்ல. ஆனால் காலடியில் விழுந்து வணங்குவது யோகி ஆதித்யநாத்தை உயர்வாக மதிப்பது என்பது ஒருபுறம் இருக்கட்டும். அது உங்களுக்குள்ள உறவு. தமிழக மக்கள் உங்களை எவ்வளவு உயர்வாக மதித்திருந்த நிலையில் எப்படிப்பட்ட உறவு உங்களுக்குள் இருப்பது என்பதை ஒரே நிகழ்வில் காட்டி விட்டீர்கள்.

தமிழக மக்கள் உங்களை எவ்வளவு உயர்வாக மதித்திருந்த நிலையில் எப்படிப்பட்ட உறவு உங்களுக்குள் இருப்பது என்பதை ஒரே நிகழ்வில் காட்டி விட்டீர்கள். இப்படிப்பட்ட வர்களிடம் இருந்து தமிழ்நாட்டை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவையே நாம் காப்பாற்றியாக வேண்டும் என்றார் 

தென் தமிழகத்தில் தொடரும் ஜாதிய கொலைகளை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்குநேரி பகுதியை வன்கொடுமை பகுதியாக அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதே திருமாவளவன்தான், கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் என புகழ்ந்து பேசி யிருந்தார். அப்போது அதிமுக, திமுகவுக்கு எதிரான மனநிலையில் இருந்த திருமாவளவன், தற்போது திமுக கூட்டணியில் இருப்பதால்,  ரஜினியின் தனிப்பட்ட  நடவடிக்கை குறித்து விமர்சித்து பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா என்பதையே நினைவூட்டுகிறது.