சந்தானம் நடிக்கும் ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ படத்தின் ஆடியோ உரிமையை வாங்கியது ‘திங்க் மியூசிக்’

Must read

சந்தானம் நடிப்பில் மனோஜ் பீத்தா இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’.

தெலுங்கில் வெளியான ‘ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா’ என்ற படத்தின் தமிழ் ரீ-மேக்கான ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ படத்தை லேப்ரிந்த் ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது.

யுவன்சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தின் தயாரிப்பு பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இந்தப் படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ள நிலையில், இந்தப் படத்தின் ஆடியோ உரிமையை ‘திங்க் மியூசிக்’ நிறுவனம் வாங்கியிருப்பதாக அறிவித்துள்ளது.

ஏஜென்ட் கண்ணாயிரத்தில் சந்தானத்துடன் ஊர்வசி, ‘குக் வித் கோமாளி’ புகழ், முனிஸ்காந்த் உள்பட பலர் நடித்துள்ளனர்.

More articles

Latest article